ஈஸி அவல் உப்புமா

தேதி: June 1, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. அவல் - 2 கப்
2. பச்சை மிளகாய் - 2
3. தேங்காய் துருவல் - 1/2 கப்
4. உப்பு - தேவைக்கு

தாளிக்க:

1. தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
2. கடுகு - 1/2 தேக்கரண்டி
3. சீரகம் - 1/2 தேக்கரண்டி
4. உளுந்து - 1/2 தேக்கரண்டி
5. கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி
6. கறிவேப்பிலை - சிறிது
7. மிளகாய் வற்றல் - 2
8. பெருங்காயம் - 1 சிட்டிகை


 

அவலுடன் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு 15 நிமிடம் ஊர வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, தேங்காய் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
தேங்காய் வதங்கியதும், தண்ணீரை வடித்து விட்டு அவலை சேர்த்து 5 நிமிடம் கிளரி எடுக்கவும்.
விரும்பினால் நெய்யில் வறுத்த முந்திரி, வேர்கடலை கூட சேர்க்கலாம்.


மேலும் சில குறிப்புகள்