ஆகாவா அல்வா

தேதி: June 1, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தோல் சீவி பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகள்-1கப்
காரட் துருவல் - 1கப்
வாழைப்பழத்துண்டுகள்-1 கப்
தேங்காய் துறுவல்-1 கப்
பால் - 1 கப்
சர்க்கரை- 2கப்
நெய்-1 கப்
ஏலக்காய்த்தூள்-1/2டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10


 

முதலில் ஆப்பிளை தோல் சீவி பொடியாக
நறுக்கவும்.
காரட்டை சிறிது பால் சேர்த்து விழுதாக
அரைக்கவும்.
வாழைப்பழத்தை பொடியாக நறுக்கவும்
பின் முந்திரி ,ஏலக்காயை நெய்யில் வறுத்து
தனியே பொடித்து வைக்கவும்.
பின் வாணலியில் பழங்கள்,தேங்காய்துருவல்,பால்,சேர்த்து
மிதமான தீயில் கிளறி கொண்டே இருக்கவும்.
கொஞ்சம் கெட்டியானவுடன் சர்க்கரை சேர்த்து,
சர்க்கரை கரைந்ததும் இடையிடையே,
நெய் சேர்த்து கிளறவும்.
வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது
ஏலக்காய் தூள் முந்திரி சேர்க்கவும்.
சீக்கிரம் முடிக்க தீயை கூட்டாமல்,மிதமான
தீயிலேயே செய்யவும்.


வேறுமுறை:
நேரத்தை குறைக்க விரும்பினால்ஆப்பிள்
துண்டுகள் மற்றும் வாழைப்பழத்தை பால்
சேர்த்து அரைத்து செய்யலாம்.
வேண்டுமானால் சர்க்கரை மற்றும் நெய் அளவை
குறைத்துக்கொள்ளலாம்.எப்படி செய்தாலும்
சுவையாக இருக்கும்
ஒரு வாரம் வைத்து சாப்பிட விரும்பினால்,
தேங்காயை தவிர்க்கவும்.
புளிப்பில்லாத ஆப்பிளாக இருந்தால் சுவை
தூக்கலாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்