கடப்பா

தேதி: June 2, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (7 votes)

 

வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 10 பல்
பொட்டுக்கடலை - 50 கிராம்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சோம்பு - கால் மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்க வேண்டும். பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் உப்பு சேர்த்து அரைக்கவும். தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து வைக்கவும்.
எண்ணெய் சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு பொரிய விடவும்.
வெங்காயம் பூண்டு சேர்த்து சிவக்க வதக்கிய பின் தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.
பிறகு கரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி கொதிக்கவிடவும். நன்கு கொதித்து சிறிது கெட்டியானதும் இறக்கவும். இட்லி தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Hi Ms.Moorthy,

R u frm thirunelveli?

என் கணவரின் ஊர் திருநெல்வேலி பக்கம். நீங்களும் திருநெல்வேலியா???

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!