மோர் மிளகாய் சட்னி

தேதி: June 2, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரைக்க வேண்டியவை:
பொட்டுக்கடலை - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3
மோர் மிளகாய் - 3
கொத்தமல்லி இலை - கால் கட்டு
தக்காளி - அரை பாகம்
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க வேண்டியவை :
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு


 

அரைக்க வேண்டியவைகளை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் கொட்டவும்.


எல்லா வகை சட்னியிலும் தேங்காய்க்கு பதிலாக தக்காளி சேர்த்து அரைக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்