பொன்னாங்கண்ணிக் கறி

தேதி: June 3, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பொன்னாங்கண்ணி - 250 கிராம்
பாசிப்பயறு - 4 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 15-20 கிராம்
பூண்டு - 2 பற்கள்
பால் - 50 - 75 மி.லி
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சம்புளி - 2 தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி


 

பொன்னங்கண்ணி கறி செய்ய மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
பொன்னாங்கண்ணியை தண்டோடு(முத்தலைத் தவிர்த்து) சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டை நறுக்கி வைத்துக் கொள்ளவும். பயறை 10 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பயறு, நறுக்கின வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், உப்பு போட்டு 300 மி.லி தண்ணீர் ஊற்றி தீயின் அளவை குறைத்து, மூடி நன்கு வேக விடவும்.
இவையனைத்தும் சேர்ந்து நன்கு வெந்ததும் அதில் பொன்னாங்கண்ணி கீரையை சேர்க்கவும்.
அதனுடன் 100 மி.லி சுடுநீரை ஊற்றி பிரட்டி விட்டு மீண்டும் மூடி வைத்து வேக விடவும்.
தண்ணீர் வற்றி நன்கு வெந்ததும் பாலை ஊற்றி கிளறி விட்டு கொதிக்க விடவும்.
கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து மேலே எலுமிச்சை புளி விட்டு பிரட்டி விடவும்.
சுவையான ஆரோக்கியம் நிறைந்த பொன்னங்கண்ணிக் கறி ரெடி. இது மிகவும் குளிர்ச்சியான கறி. முக்கியமாக அம்மை நோய் வந்தவர்களுக்கு மிளகாய் சேர்க்காமல் இதை செய்து கொடுப்பார்கள். அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் <b> திருமதி. அதிரா </b> அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முகப்பை பார்த்தவுடன் உங்களுடைய குறிப்பாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டே ஓபன் செய்தேன்.என்னுடைய கணிப்பு சரியாகிவிட்டது.பார்க்கும்பொழுதே சாப்பிடதோனுது. கீரைகிடைக்கும்பொழுது செய்துபார்த்துவிட்டு சொல்கிறேன்.

சவுதி செல்வி

சவுதி செல்வி

நல்ல சத்தான குறிப்பு. வித்தியாசமான கீரை ரெசிப்பி. பருப்பில் செய்வேன். நீங்க பயிரில் செய்து நல்ல நியூட்ரீஷியன் ரெசிப்பி கொடுத்திருக்கீங்க. இந்த வாரம் செய்து விட்டு சொல்கிறேன் அதிரா. ஆமா பொன்னாங்கன்னிக்கு இங்லீஷ்ல் என்ன பெயர். சொல்லுங்க நாளைக்கு எனக்கு வாங்குவதற்கு ஈஸியாக இருக்கும்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அதிரா... என்ன நடக்குது?! இப்போலாம் முகப்பில் அதிரா குறிப்பை தவிர வேறு வருவதில்லை போலும்.... ;) சரி எனக்கு இங்கு பருப்பு கீரை, ஸ்பினாச் தவிர வேறு கிடைக்காது (இருக்கும் மற்ற கீரை எனக்கு தெரியாது). அதிலும் இதே போல் செய்யலாமா? வீட்டுக்கு போன அம்மா தோட்டத்தில் வெச்சிருக்காங்க வித விதமான பொன்னாங்கன்னி.... அப்போ செய்துவிட்டு சொல்றேன். இப்போ பருப்பு கீரை ஓகேவான்னு சொல்லுங்கோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எலுமிச்சை புளி என்றால் என்ன

ஹாய் அதிரா மேடம்
நல்லா அரோக்கியமான கறி குடுத்திருக்கிரிர்கள் நன்றி.
இந்த கறி கயப்பு தன்மை இருக்குமா?
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அங்கு கிடைக்கிறதா வாவ். எனக்கு தெரிந்து இங்கு கிடைப்பதில்லை. இந்தியா சென்றால் அவசியம் செய்து பார்க்கிறேன். எனக்கு எப்பவோ சாப்பிட்ட நினைவு வந்த்தது.

கேள்வி மேல் கேள்வி கேக்கறோம்.... குறிப்பு குடுத்துட்டு ரெஸ்ட்'ல இருக்கீங்களா அதிரா??!!! ;) வந்து பதில் சொல்லிட்டு போங்க. எப்ப பாருங்க சமைத்து அசத்தலாம் மட்டும் ஓப்பன் பண்ணி பார்த்து பதில் போட்டுட்டு ஓடி போறது. :( Too bad.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சவூதிசெல்வி, தனிஷா மிக்க நன்றி. தனிஷா எனக்கு ஆங்கிலப்பெயர் தெரியவில்லை. ஹைஷ் அண்ணனைத்தான் கேட்கவேண்டும்.

வனிதா மிக்க நன்றி. //அதிரா... என்ன நடக்குது?! // மனிஷர்தான் நடக்கினம் என்று இதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன்:) உங்கள் கேள்வியைப் பார்த்ததும் எனக்கும் சந்தேகம் வந்திட்டுது:). பொன்னாங்கண்ணிக்கு மட்டும்தான் இப்படிச் சேர்ப்போம். ஏனைய சில கீரைகளுக்கு(பசளி) மைசூர் பருப்புத்தான் சேர்த்துச் செய்வது வழக்கம். சரியாக எனக்கு தெரியவில்லை.

கவிதா எலுமிச்சை என்றால் தேசிக்காய்.... லைம்.

விஜி இங்கும் எமக்குக் கிடைக்காது. ஆனல் லண்டனில் கிடைக்கிறது. போனபோது வாங்கிவந்தோம்.

வனிதா சில நாட்களில் எனக்கு கொஞ்சம் நேரம் கிடைப்பதில்லை. என்னைக்கேட்கவா ஆளில்லை என்கிறீங்கள்? "பாம்" உடன் அலைகிறார்கள்.... நான் ஒழித்துத் திரிகிறேன்:)..... உங்களையும் இப்போ நம்ப முடியாமல் இருக்கே... வாறீங்கள் பின்னர் தலைமறைவு... பின்னர் அமைதி... பின்னர் கலகலப்பு.... அதிராவைப்போல எப்பவும் ஒரே மாதிரி இருக்கவேணும் சரியோ:).... அப்பாடா... வேலை ஆரம்பமாகிவிட்டது:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா... மற்றவர்களுடையது அல்லாது நீங்கள் உங்களுடைய குறிப்புகள் செய்து காட்டுவது (யாரும் சமைக்கலாம் பகுதிக்கு) கூட்டாஞ்சோறு பகுதியில் உங்கள் பெயரை க்ளிக் செய்தால் வருவதில்லை. அந்த குறிப்புகளை நீங்கள் இங்கும் சேர்த்தால் உங்கள் குறிப்புகளை தேட சுலபமாக இருக்கும். :) ஒரு ரசிகையின் விருப்பம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
உங்கள் கேள்வி எனக்குச் சரியாகப் புரியவில்லை. அதாவது, யாரும் சமைக்கலாமிலுள்ள என் குறிப்புக்களை கூட்டாஞ்சோறிலும் போடச் சொல்லுறீங்களோ? ஏன்? அறுசுவையில் எங்கிருந்தாலும் உணவின் பெயரைப் போட்டால் வரும்தானே? அல்லது தனிப்பிரிவாக இருப்பின் நல்லதென்கிறீங்களோ?

நான் ஏற்கனவே, எங்கள் அட்மினோடு இதுபற்றிக் கதைத்திருக்கிறேன். அதாவது, கூட்டாஞ்சோறுபோல், யாரும் சமைக்கலாமிலும், ஒவ்வொருவரின் பெயரின் கீழும் அவர்களின் குறிப்புக்களைப் பிரித்துப் போட்டால் நல்லதென்று. அவரும் புதுத்தளம் வந்ததும் முயற்சிசெய்கிறேன் என்றவர்.

இப்போதான் கொஞ்சம் அறுசுவையில் தலைகாட்டுகிறார், நாங்கள் புது... என்று தொடங்கினாலே:) மீண்டும் காணாமல் போயிடுவாரோ:) என்று பயமாக இருக்கு:). அதுசரி எப்ப என் ரசிகையானீங்கள்:)?.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஆமாம் அதிரா... நீங்க சொல்றதை தான் சொல்றேன். யாரும் சமைக்கலாம் பகுதியில் இருக்கும் உங்க குறிப்பு கூட்டாஞ்சோறு பகுதியில் உங்க பேருக்கு கீழே சேர்த்தீங்கன்னா உங்க குறிப்புன்னு தனியா தேட வசதியா இருக்கு. படம் இல்லாம வெறும் குறிப்பை அதில் சேர்த்து விடுங்கோ. இல்லைன்னா உங்க குறிப்பின் பேர் தெரிஞ்சா தானே நாங்க தேடுகல குடுத்து தேட முடியும்..... உங்க குறிப்புன்னு கூட்டாஞ்சோறு பகுதியில் 6 தான் இருக்கு, மற்றதெல்லாம் யாரும் சமைக்கலாமில் இருக்கு. ஆனா அது ஓப்பன் ஆகவே லேட் ஆகுது... (படம் லோட் ஆகனுமே), கூட்டாஞ்சோறுன்னா சுலபமா இருக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனிதா...
நல்ல ஐடியாத்தான் சொல்லியிருக்கிறீங்கள். சிந்திக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா பொன்னாங்கண்ணிக் கறி மிக அருமை. எனக்கு அன்று பார்த்தவுடன் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் பொன்னாங்கண்ணிக் கீரை இங்கு அருகில் கிடைக்காது. Sunday வாங்கி வந்து செய்தும் விட்டேன். ரொம்ப delicious & diffenent taste. உங்களுடைய புது receipe மிகவும் நன்றி.

ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

மன்னிப்பு!! மன்னிப்பு!!
சுவர்ணா என் தாமதமான பதிலுக்கு மன்னிக்க வேண்டுகிறேன். மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா
உன்களுடைய பொன்னாங்கண்ணிக் கறி செய்தேன் ரொம்பநல்லை இருந்தது இனி அடிக்ககடி செய்வேன் நன்றி.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

சுகா மிக்க நன்றி.
இப்படிச் செய்து கொடுத்தால் குழந்தைகளும் விரும்பி உண்பார்கள் உடம்புக்கும் நல்லது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்