மோர் குழம்பு மற்றொரு வகை

தேதி: June 4, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புளிக்காத மோர் - 2 கப்
அரிசி - அரை தேக்கரண்டி
துவரம் பருப்பு - அரை தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
பூண்டு - 3 பல்
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - ஒன்று
தக்காளி - ஒன்று
கத்தரிக்காய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

அரிசியையும், பருப்பையும் 45 நிமிடம் ஊறவைக்க வேண்டும். பிறகு ஊறவைத்த அரிசி பருப்புடன் மிளகு, சீரகம், பூண்டு, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு அரைக்கவும்.
மோரை நன்கு கரைத்து உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அதனுடன் அரைத்ததை சேர்த்து கரைத்து வைக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு தாளிக்கவும்.
நறுக்கிய தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும். பின்பு வில்லையாக நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
காய் வெந்ததும் கரைத்து வைத்த மோரை ஊற்றி 5 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.


கத்தரிகாய்க்கு பதிலாக வெண்டைக்காய், முருங்கைக்காய், வெள்ளை பூசணிக்காய் கூட பாவிக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் லாவண்யா,
இன்று உங்க ஸ்டைலில் பூசணிக்காய் போட்டு மோர் குழம்பு செய்தேன். பூண்டு, தக்காளி எல்லாம் மோர் குழம்பில் சேர்த்து செய்தது, புதுமையான சுவையில் நன்றாக இருந்தது. குறிப்புக்கு நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

தங்களின் பின்னூடத்திற்கு மிக்க நன்றி!!இந்த மாதிரியான பின்னூட்டம் தான் எங்களை மாதிரியான கத்துகுட்டிகளுக்கு ஊக்கம்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா, எப்படி இருக்கீங்க. இந்த குழம்பை சென்ற வாரத்தில் செய்தேன். தக்காளி போட்டு செய்வது வித்தியாசமாக உள்ளது.மிகவும் நன்றாக இருந்தது. நன்றி உங்களுக்கு.

ரொம்ப சூப்பரா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க வானதி? பின்னூட்டம் தந்ததற்கு மிக்க நன்றி. இது என் அம்மாவின் கைவண்ணத்தில் உருவான குறிப்பு.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!