கோதுமை அடை

தேதி: June 4, 2009

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - ஒரு கப்
ஊறவைத்த கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

கோதுமை மாவுடன் ஊறவைத்த கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.
1/2 மணி நேரத்திற்கு பின் எலுமிச்சை அளவு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
கல் சூடானதும் எண்ணெய் தேய்த்து ஒரு உருண்டை எடுத்து மெல்லியதாக தட்டவும். சுற்றி எண்ணெய் ஊற்றவும்.
பின் திருப்பி போட்டு இன்னும் மெல்லிதாக தோசை கரண்டியால் தட்டி சுற்றி எண்ணெய் ஊற்றவும்.
வெந்ததும் வெங்காய சட்னி, தக்காளி சட்னி அல்லது புதினா சட்னியுடன் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

excellent menu