காட்டு புளிச்சாறு (ரசம்)

image

வழங்கியவர் : asiya omar

தேதி : வியாழன், 04/06/2009 - 18:44

ஆயத்த நேரம் : 10 நிமிடம்

சமைக்கும் நேரம் : 10 நிமிடம்

பரிமாறும் அளவு : 6 நபர்களுக்கு

0
No votes yet
Your rating: None
 

 

  • புளி - சிறிய எலுமிச்சை அளவு
  • மிளகாய் வற்றல் - 3
  • வெந்தயம் - அரைஸ்பூன்
  • உளுத்தமபருப்பு - 2 டீஸ்பூன்
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • பூண்டு - 4 பல்
  • மல்லி, கறிவேப்பிலை - சிறிது
  • எண்ணெய் - 2- 3 டேபிள்ஸ்பூன்
  • பெருங்காயம் - 2 பின்ச்
  • தக்காளி - 1 சிறியது
  • வெங்காயம் - 1 சிறியது.
  • உப்பு - தேவைக்கு

 

  • புளியை ஊறவைத்து ருசிக்கு தகுந்தபடி உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மல்லி இலை கட் செய்து கொள்ளவும்.
  • இரண்டு மிளகாய் வற்றல், கால்ஸ்பூன் வெந்தயம், 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, பூண்டு வறுத்து எடுக்கவும். அவற்றை மிக்ஸியில் தூள் செய்து அத்துடன் பாதி வெங்காயம், தக்காளியை ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கிள்ளிய மிளகாய்வற்றல், வெங்காயம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து மிக்ஸியில் அரைத்தவற்றை கொட்டி வதக்கவும்.
  • பின்பு அத்துடன் புளித்தண்ணீர் சேர்த்து, மல்லி இலை சேர்த்து நுரைத்ததும் இறக்கவும்.
  • சுவையான காட்டு புளிச்சாறு ரெடி.

Note:

இது விட்டு சாப்பிட்டால் புளியோதரை சாப்பிட்டது போல் மணமாக இருக்கும். இதற்கு பொட்டுக்கடலை துவையல், அப்பளமே போதும். இது ரசத்தை விட கொஞ்சம் கெட்டியாக இருப்பது போல் பார்த்துக்கொள்ளவும்.







ஆசியா எப்படி இருக்கீங்க? இந்த வித்தியாசமான ரசம் மிகவும் நன்றாக இருந்தது. நீங்கள் கூறியது போல் இதனுடன் அப்பளம் ஒன்றே போதும். நன்றி உங்களுக்கு.