சிக்கன் சம்மா

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழி - அரை கிலோ
இஞ்சி விழுது - மூன்று தேக்கரண்டி
பூண்டு விழுது - மூன்று தேக்கரண்டி
தயிர் - ஒரு கப்
மிளகாய்ப்பொடி - ஒரு மேசைக்கரண்டி
மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - கால் கிலோ
தக்காளி - 3
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - 4 துண்டு
முந்திரி - 5
சிக்கன் பவுடர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

அரை கிலோ கோழியை நன்கு கழுவிச் சுத்தம் செய்து கொள்ளவும். கால் கிலோ பெரிய வெங்காயத்தை வெட்டி கொள்ளவும்.
பிறகு இஞ்சி, பூண்டு, தயிர், மிளகாய் பொடி, மசாலா தூள் போட்டு அதில் சிக்கனைப் பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு அரை பொரியலில் பொரிக்க வேண்டும்.
மூன்று பெரிய தக்காளியையும், வெங்காயத்தையும் மிக்ஸியில் போட்டு கொஞ்சம் கரகர வென்று அரைத்து கொள்ளவும்.
பின் அந்த கலவையில் மஞ்சள், ஒரு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, சிக்கன் பவுடர் ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு நான்கு தேங்காய் துண்டு, அதில் பாதாம் அல்லது முந்திரி
5 வைத்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
அந்த கலவையை வெங்காயத் தக்காளி கலவையில் நன்றாக கலந்து விடவும்.
பின்பு அதை வாணலியில் கூடுதலாக எண்ணெய் விட்டு இந்த கலவையை கிளறவும்.
கெட்டியாக வரும் பொழுது பொரித்து வைத்துள்ள சிக்கனை அதில் கொட்டி கிளற வேண்டும். அடுப்பை மெதுவாக எரிய விட வேண்டும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்