மீன் சொதி

தேதி: June 5, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

சுத்தம் செய்த மீன் துண்டுகள் - 250 கிராம்
பழப்புளி - 10 கிராம் (சிறிய உருண்டை)
வெங்காயம் - 15 கிராம்
உள்ளி - 4 பற்கள்
பச்சை மிளகாய் - 2
பால் - 100 மி.லி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 நெட்டு


 

வெங்காயம், பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். சொதி செய்ய தேவையான மற்ற பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், பூண்டு போட்டு அதனுடன் இரண்டாக பிளந்த மிளகாய் மற்றும் வெந்தயத்தை சேர்க்கவும்.
அதன் மேல் மீன் துண்டுகளைப் போட்டு 300 மி.லி தண்ணீரில் புளியைக் கரைத்து ஊற்றி உப்பையும் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
பாதியளவு வெந்ததும் மீன் துண்டுகளை பிரட்டி விட்டு நன்கு வேக விடவும்.
மீன் நன்றாக வெந்தத்தும் மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், பால் சேர்த்துக் கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கி வைக்கவும்.
சுவையான மீன் சொதி தயார். இதனை சூடாக பரிமாறவும். இது குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி உண்ணக்கூடிய சொதி. சோறு, புட்டு, இடியப்பம் போன்றவற்றிற்கு மிகவும் பொருத்தமானது. அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் <b> திருமதி. அதிரா </b> அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலோ அதிரா மேடம்! சொதி பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது. இன்று வெள்ளிக்கிழமை என்றபடியால் நாம் மரக்கறிதான். நாளை சமைத்து பார்த்து கருத்து எழுதுகின்றேன். நம்ம தாய் நாட்டில் சிறுவர்களுக்கும், வயதானவர்களுக்கும் மீன் சொதயும் இடியாப்பமும் ஸ்பெசல் உணவு.நன்றி இது ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நன்றி ராணி. உண்மைதான் மீன் சொதி என்றாலே, குழந்தைகளுக்கு இடியப்பம் தீத்திப்போடலாம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

Hello madam,
Sri Lanka chicken curry kulambu recipe please give to arusuvai.com. pulampeyar people payan peralam
Thanks

chandran

மிக்க நன்றி
சந்திரன் அவர்களுக்கு, உங்கள் ஆர்வமான கேள்விக்கு மிக்க நன்றி. மீன் குழம்பு, சக்கின் பிரட்டல் கறி குறிப்புக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அதில் பால் சேர்க்கவில்லை. இலங்கையில் அதே முறையில் பால் சேர்த்துச் செய்வோம்.

please see these links:

arusuvai.com/tamil/node/12849
arusuvai.com/tamil/node/9434

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்