பூண்டு சட்னி

தேதி: June 5, 2009

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (5 votes)

 

பூண்டு - 100 கிராம்
பச்சை மிளகாய் - 8
தக்காளி - ஒன்று
தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

சிறிதளவு எண்ணெய் ஊற்றி பூண்டு, பச்சை மிளகாய், மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக நன்கு வதக்கி வைக்கவும்.
நன்கு ஆறியபின் பூண்டு, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைக்கவும். கடைசியாக தக்காளி சேர்த்து ஒரு சுத்து சுத்தவும்.
மீதமுள்ள எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை கொட்டி தாளித்து சட்னியில் கொட்டவும்.


பூண்டு இரத்த அழுத்தம் மற்றும் இரத்த கொழுப்பை கட்டுப்படுத்த உதவும்.

மேலும் சில குறிப்புகள்