ராகி அடை

தேதி: June 6, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

ராகி - 2 கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 5
முருங்கைக்கீரை - அரை கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

வெங்காயம் மற்றும் மிளகாயை பொடியாக நறுக்கி வதக்கவும். வதக்கியதை ராகி மாவுடன் சேர்க்கவும். வெங்காயத்தை வதக்கி சேர்ப்பதால் அடை தட்டும்போது உதிராது.
உப்பு மற்றும் கீரை சேர்த்து மாவை நன்கு பிசையவும். தண்ணீர் நிறைய சேர்க்க கூடாது.
சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
கல் சூடானதும் ஒரு உருண்டையை மெல்லியதாக தட்டி இடவும். சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் மறு பக்கம் திருப்பி போட்டு எண்ணெய் விட்டு வெந்ததும் எடுத்து தக்காளி தொக்குடன் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மிஸஸ் மூர்த்தி,

எனக்கு ரொம்ப நாளாக ராகி அடை செய்ய ஆசை. உங்கள் குறிப்பை பார்த்தவுடன், இன்றே செய்ய வேண்டும் போல் உள்ளது. சரி, எனக்கு இதில் சில சந்தேகங்கள் உள்ளன...

1. தேவையான பொருட்களில் முருங்கை கீரை என்று எழுதி இருக்கிறீர்கள்.. அதையும் சேர்த்து வதக்கி மாவுடன் சேர்க்க வேண்டுமா? இல்லை அப்படியே சேர்க்க வேண்டுமா?

2. சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டுமென சொன்னீர்கள். அதை சப்பாத்தி கல்லில் தேய்த்தெடுக்க வேண்டுமா? இல்லை, வேறு எப்படி தட்டுவது.. ?

உங்கள் விளக்கத்திற்காக காத்திருக்கிறேன்...

அன்புடன்
லக்ஷ்மி

lakshmi

முருங்கை கீரையை வதக்கியும் சேர்க்கலாம் அல்லது அப்படியே கழுவி விட்டு சேர்த்து ராகி மாவுடன் பிசைந்து விடலாம். சப்பாத்தி கல்லில் தேய்க்க வேண்டாம் நல்ல பிசைந்து விட்டு கையில் வைத்து மெதுவாக தட்டினால் போதும். சுவை சூப்பராக இருக்கும். என் அம்மா இப்படித்தான் செய்வார்கள். மூர்த்தி நான் விளக்கம் கொடுத்ததர்க்காக தவறாக நினைக்க வேண்டாம். நாங்களும் இப்படித்தான் செய்வோம்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

விளக்கம் தந்ததற்கு நன்றி.
நாங்கள் உலகின் கடைசியில் இருப்பதால் உடனுக்குடன் பதில் எழுத முடியாது ஆகையால் உங்கள் பதில் அவர்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி.. தனிஷா, மிஸஸ் மூர்த்தி(Vr Scorp என்பவரும் நீங்கள் தானே...)

தனிஷா..
எப்படி இருக்கீங்க? அஃப்ரா குட்டி என்ன சொல்றா? ரொம்ப நாள் ஆச்சு உங்களிடம் பேசி.. அபுதாபியில் இப்போ வெயில் எப்படி இருக்கு?
Ok... நீங்கள் சொன்னவாறே கையில் தட்டி செய்து பார்க்கிறேன்.. இன்று இரவு ராகி அடை தான் எங்கள் வீட்டில்...

மூர்த்தி.. நலமா இருக்கீங்களா? நானும் இப்போ தான் உங்கள் பதிலை பார்த்தேன்.. நீங்கள் US ல் இருக்கிறீர்களா? நீங்கள் சொல்வது போல் எண்ணெய் தேய்த்த கல்லில் தட்டியோ, எண்ணெய் தடவிய பட்டர் பேப்பரில் மெல்லியதாக தட்டி விட்டோ செய்தால் மிக அருமையாக வரும். என்னே.. நாங்கள் டயட்டில் இருப்பதால் அப்படி செய்ய இயலாது. எப்படியும் உங்கள் விளக்கம் பல தோழிகளுக்கு உதவியாக இருக்கும்...

எப்படியோ.. இன்று இரவு செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்..

அன்புடன்
லக்ஷ்மி

lakshmi

ஹாய் மிஸஸ் மூர்த்தி,

நேற்று எங்கள் வீட்டில் ராகி அடை செய்தோம். மிகவும் நன்றாக வந்தது. சப்பாத்தி பதத்திற்கு வரவில்லை என்றாலும் நன்றாகவே வந்திருந்தது... நீங்கள் மேலும் இது போன்ற குரிப்புகள் கொடுத்துதவ என் வாழ்த்துக்கள்.

அன்புடன்
லக்ஷ்மி

lakshmi

இந்த மாதிரி வாழுத்துக்கள் தான் எங்களை மாதிரி கத்துகுட்டிகளுக்கு ஒரு ஊக்கம். உங்க கருத்தை தெரிவித்ததற்கு மிக்க நன்றி. மறுமுறை செய்யும் போது தண்ணீரை சிறிது குறைத்து ஊற்றி பிசைந்து பார்க்கவும்.

மிக்க நன்றி....

இந்த மாதிரி வாழுத்துக்கள் தான் எங்களை மாதிரி கத்துகுட்டிகளுக்கு ஒரு ஊக்கம். உங்க கருத்தை தெரிவித்ததற்கு மிக்க நன்றி. மறுமுறை செய்யும் போது தண்ணீரை சிறிது குறைத்து ஊற்றி பிசைந்து பார்க்கவும்.

மிஸ்ஸ். மூர்த்தியும் நான் தான் Vr Scorp என்பதும் நான் தான்.

லாவண்யா

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

முருங்கக்கீரையை வதக்க தேவையில்லை. மிகவும் தண்ணியாக இல்லாதிருந்தால் சப்பாத்தி திரட்டுவது போலவே தேய்க்கலாம். இல்லை என்றால் ஒரு உருண்டையை எடுத்து என்னை தேய்த்த கல்லில் லேசாக தட்ட வேண்டும். சிறுது வெந்ததும் தோசை கரண்டியால் மீண்டும் மெல்லியதாக தட்ட வேண்டும். அதுவும் இல்லையா எண்ணெய் தடவிய பட்டர் பேப்பரில் மெல்லியதாக தட்டி விட்டு அப்படியே கல்லில் இடவும்.

செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!