கத்தரிகாய் காரகுழம்பு

தேதி: June 6, 2009

பரிமாறும் அளவு: 6

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
தக்காளி - 2
புளி - நெல்லிகாய அளவு
மிளகாய் தூள் - 1தே.க
தனியாதூள் - 1/2 தே.க

அரைக்க
-------

தேங்காய் துருவல் - 2 தே.க
முந்திரி பருப்பு - 2 தே.க
சோம்பு - 1/4 தே.க
மிளகு - 1/4 தே.க
பூண்டு - 1 பல்

தாளிக்க
-------
எண்ணெய் - 1 தே.க
கடுகு - 1/2 தே.க
வெந்தயம் - 1/4 தே.க
சோம்பு - 1/4 தே.க
கறிவேப்பிலை - 2


 

வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும்.
பூண்டு தட்டி வைக்கவும்.
கத்தரிக்காய் காம்பு வெட்டி நல்ல நீள துண்டுகளாக்கவும்.
புளியை நல்ல கெட்டியாக கரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை
சேர்த்து தாளித்து பின் வெங்காயம்,பூண்டு சேர்த்து
வதக்கவும். கொஞ்சம் வதங்கிய பின் தக்காளியையும் சேர்த்து
வதக்கவும். தக்காளி வதங்கிய பின் கத்தரிக்காய், உப்பு சேர்த்து வதக்கவும்.
தனியாதுள், மிளகாய்தூள் ,புளி கரைசல் சேர்க்கவும். நன்றாக பச்சை வாசனை
போக வதங்கியம் பின் அரைத்துள்ள மசாலாவையும்
சேர்த்து கொஞ்சம் தண்ணிர் சேர்த்து கொதிக்கவிடவும்.


இதில் வடகம் கூட சேர்த்தும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Today i made this recipe, romba nalla vanthuchu, thank

slidya ரொம்ப நன்றி. எனக்கு ரொம்ப பிடித்த குழம்பு.

ஹாய் விஜி. நலமா? நான் செய்த(செய்துகொண்டிருக்கும். இன்னும் முடியவில்லை.) உங்ககுறிப்புக்களிள் இந்த காரக்குழம்பு சூப்பர்ப்.நான் சமைத்துமுடித்தவுடன் பதிவைகொடுக்கின்றேன்.உங்க குறிப்புக்களுக்குதான் பின்னூட்டம் கொடுக்க லேட்டாகிறது.சாரிப்பா.நான் எப்படி உங்க குறிப்புக்களை மிஸ் பன்னேன் எனத் தெரியல. ஏன்னா நாங்க வெஜிடேரியன்.இதற்காக அதிரா அன்ட் ரேணுகாவிற்குதான் நன்றி சொல்லனும்.நன்றி விஜி.அன்புடன் அம்முலு

விஜி கத்த‌ரிக்காய் காரக்குழம்பு செய்தேன் சூப்பரா இருந்தது, நன்றி விஜி. நிஜமாவே இது காஆஆஆரக்குழம்புதான்,மிளகு கொஞ்சம் ஜாஸ்தியா போட்டுடேனோ என்னவோ தெரியல:)

எப்ப தாஜ்மஹாலுக்கு வர போறீங்க???

விஜி, இந்த குழம்பு சூப்பரா இருக்கு. நான் தேங்காய் சேர்க்கவில்லை. இருந்தும் ரொம்ப நன்றாக இருக்கு.நன்றி உங்களுக்கு.

உங்களின் 'ஆப்பிள் ஸ்ரீகண்ட்' இரண்டும் செய்தேன். இரண்டுமே சுவையாக நன்றாக இருந்தன. முக்கியமாய் கத்தரிக்காய் காரக்குழம்பு வித்தியாசமான சுவையாய் வீட்டிலும் என் குடும்பத்தினரின் பாராட்டைப்பெற்றது.

எப்படி இருக்கிங்க? வாவ் உங்களுடைய்ய பாராட்டு எனக்கு பொக்கிஷம். நிங்க செய்கிற சமையலை விடவா மேடம். உங்களது எல்லாமே ரொம்ப நன்றாக இருக்கும். ரொம்ப சந்தோஷமா இருக்கு மேடம்.
இப்ப நிங்க வருவதே இல்லை அருசுவை பக்கம். ஆப்பிள் ஸ்ரீகண்ட் எனக்கு ரொம்ப பிடிக்கும். என் பசங்க ஆப்பிள் சாப்பிட மாட்டங்க இது போல் செய்தால் கொஞ்சமாவது உள்ளே போகும். நன்றி.

நேற்று இந்த குழம்பு சேய்தேன், மிகவும் அருமையாக இருந்தது. லதா வைக்கும் குழம்பில் தேங்காய் சேர்க்க மாட்டார் ஆனால் எனக்கு தேங்காய் பிடிக்கும் என்பதால் சேர்த்தே செய்தேன்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹாய் விஜி அக்கா,
முதல் தடவையாக உங்களுடன் பேசுகிறேன். இன்று கத்திரிக்காய் காரக் குழம்பு செய்தேன். அருமையாக இருந்தது. எளிதாகவும் நல்ல வாசனையுடனும் இருந்தது.

ஆனால் நீங்கள் இதில் கத்திரிக்காயின் அளவை குறிப்பிடவே இல்லையே!!!!!

மிக்க நன்றி.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

Ungal kuripu than seithen.super

Ungal kuripu than seithen.super