கொண்டைக்கடலை குழம்பு சமையல் குறிப்பு - 13009 | அறுசுவை


கொண்டைக்கடலை குழம்பு

food image
வழங்கியவர் : Vr Scorp
தேதி : Sat, 06/06/2009 - 09:51
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் : 25 நிமிடம்
பரிமாறும் அளவு : 3

 

 • கொண்டைக்கடலை - 100 கிராம்
 • வெங்காயம் - ஒன்று
 • தக்காளி - ஒன்று
 • பச்சை மிளகாய் - 2
 • தேங்காய் - கால் மூடி
 • மிளகு - அரை தேக்கரண்டி
 • சீரகம் - அரை தேக்கரண்டி
 • பூண்டு - 3
 • எண்ணெய் - 2 தேக்கரண்டி
 • கடுகு - கால் தேக்கரண்டி
 • கறிவேப்பிலை - ஒரு கொத்து
 • உப்பு - தேவையான அளவு

 

 • கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே கழுவி ஊறவைக்கவும். அதே தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
 • வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். மிளகாயை கீறி வைக்கவும். தேங்காயை துருவி மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து அரைத்து வைக்கவும்.
 • எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 • வெங்காயம் சிவந்ததும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும். பின்னர் வேகவைத்த கொண்டைக்கடலை மற்றும் வேகவைத்த தண்ணீர் சேர்க்கவும்.
 • தேவையென்றால் மேலும் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். ஒரு கொதி வந்ததும் அரைத்த விழுது சேர்த்து தேவையான உப்பு சேர்க்கவும். எண்ணெய் மேலே வந்ததும் இறக்கவும்.
இதனுடன் கத்தரிக்காய், முள்ளங்கி அல்லது நூல்கோல் சேர்த்தும் செய்யலாம்.
இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..அன்பு சகோதரி

மழைக்கு சூடான சன்னா குழம்பு மிகவும் அருமையான சுவையுடன் இருந்த்து

மிகவும் நன்றி.
முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் விழக்கூடாது.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மிக்க நன்றி..

ஹைஷ் அண்ணா,

மிக்க நன்றி......உங்களிடம் இருந்து இப்படி ஒரு பின்னூட்டம் வந்ததில் மிக்க மகிழ்ச்சி. வாசகம் மிகவும் அருமையாகவும் சிந்திக்கவும் வைக்கிறது.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

கொண்டக்கடலை குழம்பு

ஹாய் திருமதி முர்த்தி! இன்று உங்கள் கொண்டக்கடலை குழம்பு செய்தேன். மிகவும் நன்றாக வந்தது, சுவையும் நன்று அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சன்னா குழம்பு

நல்ல ருசி! நன்றாக வந்தது. வாழ்த்துகள்.
காரமும் புளியும் சற்று தூக்கலாக இருப்பதற்காக சாம்பார்பொடியும் சிறிதளவு பழப்புளியும் சேர்த்தேன். நல்ல மசாலாவாசனையோடு அருமையாக இருந்தது.

வாழ்க வளமுடன்!

மிக்க நன்றி.

வாழ்க வளமுடன்!

மிக்க நன்றி.

யோகராணி, இளமதி....

உங்களின் பின்னூடத்திற்கு மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி.

லாவண்யா
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

கொண்டக்கடலை குழம்பு

லாவண்யா இன்று உங்க கொண்டக்கடலை குழம்பு செய்தேன் நன்றாக இருந்தது நன்றி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

லக்ஷ்மிஷங்கர்

செய்து பார்த்து பின்னூட்டம் தந்ததற்கு மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி.

லாவண்யா
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா

லாவண்யா இன்று உங்க கொண்டக்கடலை குழம்பு செய்தேன் நன்றாக இருந்தது நானும் இளமதி மாதிரி புளியும், சாம்பார்பொடியும் போட்டு செய்தென் என் ஹஸ்க்கு ரொம்பப் புடித்தது இவ்வளவு நாள் வெறும் சுண்டல் தான் செய்தேன் இனி உங்க குழம்பும் செய்வேன்
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

பின்னூட்டம்

செய்து பார்த்து பின்னூட்டம் தந்ததற்கு மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!