பருப்பு ரசம்

image

வழங்கியவர் : ESMS-4

தேதி : Sat, 06/06/2009 - 11:27

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

0
No votes yet
Your rating: None
 

 

  • புளி -எலுமிச்சை அளவு
  • துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் -1கப்
  • தக்காளி -1ல்பாதி
  • பச்சைமிளகாய் -1
  • கறிவேப்பிலை -சிறிது
  • சீரகம்,மிளகு -1ஸ்பூன்
  • பூண்டு -5பல்
  • ரசப்பொடி -1ஸ்பூன்
  • உப்பு -தேவையான அளவு
  • எண்ணை -1ஸ்பூன்
  • கடுகு -1/4ஸ்பூன்
  • கொத்தமல்லிதழை -சிறிது

 

  • புளியை ஊறவைத்து தக்காளிசேர்த்து நன்கு கரைத்து அதில் பருப்புதண்ணீர் சேர்த்து வைக்கவும்.
  • பூண்டு தோல் உரித்து சீரகம்,மிளகுடன் சேர்த்து தட்டிவைக்கவும்.
  • பச்சைமிளகாய் இரண்டாக கீறிவைக்கவும்.
  • பாத்திரத்தில் எண்ணை ஊற்றி கடுகு போட்டு மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி தட்டிய பூண்டு,சீரகம் போட்டு வதக்கி கரைத்துவைத்திருக்கும் புளிதண்ணீரை ஊற்றவும்.
  • ரசப்பொடி,உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து கொத்தமல்லி தூவி தட்டு போட்டு மூடிவைக்கவும்.அடுப்பை சிம்மில்வைக்கவும்.ரசம் நன்கு நுரைத்துவரும்பொழுது இறக்கவும்.
  • இந்தரசம் கொதிக்ககூடாது.






செல்வி, இந்த ரசம் ரொம்ப நல்லா இருந்தது. இனி அடிக்கடி என் சமையலில் இடம் பெறும். நன்றி உங்களுக்கு.

ரசம் ரொம்ப நல்லாஇருந்தது என்று கேட்க சந்தோசமாக உள்ளது செய்துபார்த்து பின்னூட்டம் குடுத்ததுக்கு நன்றி.

சவுதி செல்வி

சவுதி செல்வி

ஹாய் செல்வி.நலமாக இருக்கீங்களா? முதல் முறையாக உங்களுடன் பேசுகிறேன். உங்களுடைய இந்த பருப்பு ரசம் நன்றாகவும், டேஸ்டாகவும் இருந்தது.நேற்று மதியம் உருளை வறுவல், புடலங்காய் பொரியல் நன்றாக இருந்தது. இதிலே பின்னூட்டம் தந்ததிற்கு மன்னிக்கவும்.நன்றி. அன்புடன் அம்முலு.

ரசம் நல்ல டேஸ்டாக இருந்தது என்று கூறியது மகிழ்ச்சியாக இருக்கிறது.இது என்னுடைய அம்மாவின் பக்குவம்.மன்னிப்பெல்லாம் எதற்கு செய்துபார்த்து உங்களுக்கு பிடித்திருந்தால் அதுவே மகிழ்ச்சி.நன்றி

சவுதி செல்வி

சவுதி செல்வி

வேலை முடிந்து இன்று மாலைதான் வந்தேன். அதனால் எதும் அதிகமாக செய்யமுடியவில்லை. 9 நாட்களாக தலைநகரத்தில் உணவகத்தில் சாப்பிட்டு நாக்கு செத்து போய்விட்டது. இரவுக்கு இந்த பருப்பு ரசம் வைத்தேன். மீண்டும் உயிர் வந்தது போல் இருந்தது. நன்றி.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.
ஹைஷ்126

உங்களுடைய பின்னூட்டம் பார்த்து சந்தோசமாக இருக்கிறது.செய்துபார்த்து நன்றாக இருந்தது என்று சொன்னதுக்கு நன்றி.

சவுதி செல்வி

சவுதி செல்வி