கிட்ஸ் பேக்டு மஷ்ரூம்

தேதி: June 6, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய பட்டன் காளான் மொட்டுகள் – 6
வேக வைத்த உருளைக்கிழங்கு - ஒன்று
சின்ன வெங்காய விழுது – ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரைத் தேக்கரண்டி
தக்காளி சாஸ் – ஒரு தேக்கரண்டி
சோயாசாஸ் - ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் (அல்லது சீஸ்) – 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு


 

உருளைக்கிழக்கை வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தையும், இஞ்சி பூண்டையும் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
காளான் துண்டுகளில் உள்ள தண்டு பகுதியை மட்டும் மெதுவாக எடுத்து தனியே வைக்கவும்.
தனியே எடுத்த அந்த தண்டு பகுதியை மட்டும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காளான் துண்டுகளின் மீது முழுவதுமாக (உட்புறம் மற்றும் வெளிபுறங்களில்) வெண்ணெயை தடவி வைக்கவும்.
வாணலியில் மீதி வெண்ணெயை போட்டு வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு நறுக்கிய காளான் தண்டுகளை போட்டு நன்றாக வதக்கி விட்டு அதனுடன் மசித்த உருளைக்கிழங்கையும் போட்டு வதக்கவும்.
அதன் பின்னர் மிளகுத்தூள், உப்பு மற்றும் சாஸ் வகைகளை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து ஆற விடவும்.
ஆறியதும் எடுத்து வெண்ணெய் தடவி வைத்திருக்கும் காளானுக்குள் வைத்து ஸ்டஃப் செய்யவும்.
அவனை 350 F ல் முற்சூடு செய்து வைத்துக் கொள்ளவும்.
ஸ்டஃப் செய்து வைத்திருக்கும் காளான் துண்டுகளை ஒரு பேக்கிங் ட்ரேயில் அடுக்கி வைக்கவும்.
பேக்கிங் ட்ரேயை முற்சூடு செய்த அவனில் 10 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் எடுக்கவும். காளான் நன்றாக நிறம் மாறி வெண்ணெய் உருகி எல்லா பக்கங்களிலும் வழிந்து இருக்கும்.
சூடான சுவையான பேக்டு காளான் ரெடி. ஆறியவுடன் பரிமாறவும்.
காளானில் நிறைய சத்துக்கள்(புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்பு, வைட்டமின்(A,D,H,B1,B2…,….) இருப்பதுடன். இதை சாப்பிடுவதால் முக்கியமாக புற்று நோய் வராமல் தடுக்கும் எதிர்ப்பு சக்தி கிடைப்பதாக கண்டு பிடித்துள்ளார்கள். இத்தனை சத்துக்கள் உள்ளதை நம் குழந்தைகளும் சாப்பிடவேண்டும் தானே. ஏற்கனவே கூட்டாஞ்சோறில் குழம்பு வகை கொடுத்து விட்டதால். வேறொரு முறையில் காளானை செய்து காளானை பற்றிய நல்ல ஒரு தகவலுடன் இந்த பேக்டு காளான் குறிப்பினையும் <b> திருமதி. இளவரசி </b> அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். செய்து சுவைத்து விட்டு கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப நல்லாயிருக்கு உங்க ரெசிபி.குட்டிப் பொண்ணும் ரொம்ப அழகா இருகாங்க.இலையை பார்த்து ரொம்ப வருஷமாச்சு,அந்த கொட்டை வாழையிலையில் அழகா வைத்திருக்கிங்க இளவரசி!!

simply super definitely my son will love this and just wait after giving to my son i reply what he says

anusathish

இங்கு வெளிநாட்டில் வாழையிலை பார்க்க
அரிதாக இருப்பதால்தான் என் தோட்டத்தில்
வாழை வைத்துள்ளேன்.அதில் சாப்பிடுவது
தனி மகிழ்ச்சி ...மற்றும் ஆரோக்கியமானதும் கூட
இல்லியா? அதனால்தான்..
இந்த உணவை செய்து சுவைத்து பாருங்கள்பாருங்கள்....நன்றி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

thanks for ur feedback...to my kids baked mushroom
receipe..
let u and ur family enjoy this food..(especially ur son)
BTW,I too from software line only..but not working now.
Have a Nice day!

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி, புதுவிதமாகச் சிந்தித்துச் செய்திருக்கிறீங்கள். இப்போதான் உள்ளே வந்து பார்க்கிறேன். elu என்பது இளவரசியாகிய நீங்களா? மகளும் அழகாக வாழை இலையில் சாப்பிட்டுக்காட்டுகிறா. உணவின் பெயருக்குப் பொருத்தமான அட்வெட்டைஸ் ஆக இருக்கு, மகள் சாப்பிட்டுக்காட்டுவது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

sorry adhiraa...my tamil font not wroking at present..but anyway i thought to reply u immediately...so i start in english..don't feel bad pls.
first up all thanks for ur feedback..it is really great to get a feedback from a famous person from arusuvai(arusuvaiyae unga name-ale adhirudhilla)
nalla kalakkuringa..
then yesterday i did ponnanganni..keerai..usually i do it without milk..but this time i did it by adding milk...(by seeing ur receipe)
my kids really enjoy and eat the curry ...thanks
I suppose to put my feedback in ur receipe page..
again don't mistake me..
i write u next time with our arumai Tamil..ok
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நான் உங்களின் "கிட்ஸ் பேக்ட் மஷ்ரூம்" பார்த்ததும் உடனே செய்துவிட்டேன். என் கணவருக்கு மிகவும் பிடித்திருந்தது. :) ரொம்ப சுவையாகவும் இருந்தது. நன்றிங்க இளவரசி.

இப்படிக்கு உங்கள் புதுத் தோழி,
மைதிலிதியாகராஜன்

"நடப்பதெல்லாம் நன்மைக்கே"

நான் நேற்று இதை செய்தேன்.வெங்காயம் அரைத்து வைக்காமல் பொடிதாக வெட்டிவிட்டேன்.மிகவும் நன்றாக வந்தது.மிகவும் நன்றி இளவரசி

மைதிலி,
இன்றுதான் நீண்ட இடைவேளைக்கு பிறகு அறுசுவைக்குள் நுழைந்தேன் .உங்கள் பின்னூட்டம் பார்த்தேன்.
பிடித்திருந்ததா..!!மகிழ்ச்சி....நன்றி..

அனிதா ,
உங்கள் பின்னூட்டத்திற்கு மகிழ்ச்சியும்,நன்றியும்
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.