தேங்காய் லாடு

தேதி: June 6, 2009

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேங்காய் துருவல் - 2 கப்
கண்டென்ஸ்ட் மில்க் - ஒரு டின்
முந்திரி - 6
பாதாம் - 4
நெய் - 1/2 ஸ்பூன்


 

முந்திரி, பாதாம் இரண்டயும் பொடியாக நறுக்கி நெய்யில் பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு அகன்ற வாணலியில் கண்டென்ஸ்ட் மில்க் முழுவதையும் ஊற்றி அதனுடன், தேங்காய் துருவல் 1 கப் போட்டு கலந்து பின் அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்கு கை விடாமல் கிளறவும்.
கை சிறிது விட்டாலும் அடிப்பாகம் தீய்ந்து விடும்.
நன்கு கொதித்து கெட்டியாக சுருண்டு வரும்.(தண்ணீர் தொட்டு விட்டு இதை தொட்டு பார்த்தால் உருட்ட வர வேண்டும்)அந்த நிலையில் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். மீதமுள்ள தேங்காய் துருவலை தட்டில் பரப்பி அதில் வறுத்த பருப்புகளையும் தூவி கலந்து வைக்கவும்.
கை பொறுக்கும் மிதமான சூட்டில் இருக்கும்போது, சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி அதை பரப்பி வைத்திருக்கும் துருவலில், நன்கு எல்லா இடத்திலும் படும்படி புரட்டி, உருட்டி எடுத்து வைக்கவும்.
எல்லா உருண்டையும் அவ்வாறே செய்யவும்.
நன்கு சுவை மிக்க தேங்காய் லாடு தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் அப்சரா எப்படி இருக்கீங்க?முதல் முறை உங்களுடன் பேசுகிறேன், சரி விஷயத்துக்கு வரேன்,

கண்டன்ஸ்ட் மில்க் எத்தனை ml வேனும்,என்னிடம் சின்னது 90g உள்ளது,இந்த லாடை எத்தனை நாட்கள் வைத்திருக்கலாம்?

என்றும் அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

எப்படி இருக்கீங்க ரேணுகா?தங்கள் சந்தேகத்தை முதலில் தீர்க்கின்றேன்.இது தேங்காய் சேர்த்து செய்வதால்,ஒரு நாளைக்குதான் வைத்து சாப்பிடலாம்.ஃப்ரிஜ்ஜில் வேணும் என்றால் வைத்து சாப்பிட்டலாம்.கெடாது.அப்புறம் இதற்க்கு 200 டின் தான் நான் சொன்னதற்கான அளவு.தற்போது எனக்கு ஒரு சந்தேகம். தாங்கள் அபுதாபியில் இருப்பதாக தெரிந்துக்கொண்டேன்.நீங்கள் இதற்க்கு முன் துபையில் இருந்தீர்களா?ஏன் கேட்கிறேன் என்றால்,எனக்கு தெரிந்ததோழி ஒருவர் துபையில் இருந்திருந்தார்.திடீரேன்று அவர்கள் காலி செய்துவிட்டு சென்றுவிட்டார்கள்.தற்போது அபுதாபியில் இருப்பதாக கேள்வி.அதான் கேட்டேன்.தவறாக எடுத்துக்கொள்ள்வேண்டாம். அன்புடன், அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அய்யோ அப்சரா,எனக்கு எத்தனை சந்தோஷமா இருக்கு தெரியுமா!!உங்களை நான் இங்க பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை,அண்ணா எப்படி இருக்காங்க,பசங்க எப்படி இருக்காங்க,பொண்ணு எப்படி இருக்கா?அப்சரா என்று பெயரை பார்த்தது நீங்களோ என்று நினைத்தேன்,துபாய் என்று இருந்தால் ஒரே குழப்பம்,எனக்கு ரெம்ப சந்தோஷமா இருக்கு,நான் அபுதாபி வருவேன்னு நினைத்தே பார்க்கல,ஊருக்கு போனேன் தானே திரும்பி 4 மாசம் கழித்துதான் வந்தேன்,வந்த மறுநாளே அபுதாபி வந்துட்டேன்,எல்லாமே நிமிஷத்தில் மாறிடுச்சு ,கோகுல் இப்ப ஸ்கூல் போறான்,2 மாசமா தான் போய்கிட்டு இருக்கான்,என்கிட்ட உங்க நம்பர் இல்லை அப்சரா,,அதான் என்னாலையும் பேசமுடியல,இல்லைன்னா நானாவது பேசாத இருக்கிறதாவது,போன வாரம் கூட நினைத்துகிட்டு இருந்தேன் பேசி ரெம்ப நாள் ஆகுதேன்னு,கோகுல் கிளாசில் பரிகான்னு ஒரு பொன்னு இருக்கா,இவன் சொல்லும் போது நம்ப பரிகா ஞாபகம் தான் வந்தது,நீங்க இப்ப துபாயிலா இருக்கீங்க?அண்ணனை கேட்டதாக சொல்லுங்க,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

எப்படீ இருக்கீங்க ரேணு?அண்ணன்,கோகுல் எல்லாம் எப்படி இருக்காங்க?நங்கள் எல்லோரும் நலம்.சிஸ்டம் எனக்கு ஒரு வாரம் படுத்தல்.அதான் பதில் தர தாமதம் ஆயிடுச்சி.எப்படியோ இப்படிதான் உங்களை கண்டுப்பிடிக்கணும் என்று இருந்திருக்கு.நல்லபடியாக இருக்கீங்கள்ள அதுவே சந்தோசம்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அனைவரும் நலம் அப்சரா.அங்கு அனைவரும் நலமா?உங்கள் பதில் கண்டு மிகவும் மகிழ்ச்சி.இங்கு அபுதாபி வந்ததும் இவரும் அண்ணனுக்கு இரண்டு மூனு தடவை அடித்தார்,ஆனால் ரிங் போய் கொண்டே தான் இருந்தது.போன வாரம் கூட அடித்தார்,பட் நோ ஆன்சர்.அண்ணனிடம் அதே மொபைல் நம்பர் தானே இருக்கு?

இது என் மெயில் ஐடி அப்சரா,மெயில் பன்னுங்க,போன் நம்பர் தரேன்.நான் சனிகிழமை ஊருக்கு போறேன்,இந்த முறை 3 பேரும் போறோம்.ஒரு மாதம்,நீங்கள் ஊருக்கு போறீங்களா?
ரெம்ப சந்தோஷமா இருக்கு உங்களிடம் பேசியதில்
அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அப்சரா இன்று இந்த லட்டு செய்திட்டேன்,ரெம்ப நல்லா இருக்கு, ஆமாம் இதுக்கு சர்க்கரை வேண்டாமா?நான் 2 ஸ்பூன் போட்டேன்,

கோகுலுக்கு மட்டும் தேங்காய் போட்டு பிரட்டவில்லை,அவனுக்கு இது தினுமும் வேனுமாம்,டேஸ்டும் சூப்பர்,நினைத்தவுடன் செய்திடலாம் மிக்க நன்றி.

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹாய் ரேணுகா,நலமா?கோகுலும்,அண்ணனும் நலம்தானே?தாங்கள் செய்து பார்த்து பின்னூட்டம் தந்ததற்க்கு மிக்க நன்றி.சுலபமான ஸ்வீட்தானே..கோகுல் கேட்கும் போது செய்து விட்டால் போச்சு.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.