சேமியா பக்கோடா

தேதி: June 7, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1) சேமியா - 1 கப்
2) கடலை மாவு - 1/4 கப்
3)அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
4) வேக வைத்த உருளைகிழங்கு - 1 பெரியது
5) பெரிய வெங்காயம் - 3
6) இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
7) பச்சை மிளகாய் - 6(காரத்திற்கேற்ப)
8) நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
9) புதினா - விருப்பப்படி
10) மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
11) உப்பு - தேவைக்கேற்ப
12) எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு


 

சிறிது நெய் பூசி சேமியாவை பொன்னிறமாக வறுக்கவும்.

கொதிக்கும் தண்ணீரில் வறுத்த சேமியாவை போட்டு உடனே வடிக்கவும்.

மேலும் கொஞ்சம் பச்சை தண்ணீரை ஊற்றி நன்றாக வடித்து விடவும்.

வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும்.

உருளைக்கிழங்கை மசித்து, சேமியாவையும் மற்ற பொருட்களையும் சேர்த்து கலக்கவும். இதில் ஒரு டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெய் விட்டுக் கலக்கவும்.

கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும், மாவை சிறு துண்டுகளாக போட்டு எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்