காரட் பீன்ஸ் பொரியல்

தேதி: June 8, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

காரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
தேங்காய் - கால் மூடி
சின்ன வெங்காயம் - 10
சீராக தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு


 

காரட் பீன்ஸ் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காயை துருவி கொள்ளவும்.
எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் நன்கு சிவக்க வறுப்பட்டதும் தேங்காய் நசுக்கிய பூண்டு மற்றும் காய்களை சேர்த்து வதக்கவும்.
பிறகு மற்ற பொடிகள் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். காய் நன்கு வெந்ததும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

லாவண்யா, நலமா? எப்படி இருக்கீங்க? உங்களின் இந்த குறிப்பு செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. தேங்காய் மட்டும் சேர்க்கவில்லை. நன்றி உங்களுக்கு.

நான் அம்மா வீட்டில் அருமையாக இருக்கிறேன்.நீங்க எப்படி இருக்கீங்க..... உங்களின் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். அம்மாவிடம் காட்டி பெருமை அடித்து கொண்டேன். ஹி ஹி ஹி......
எனக்கும் தேங்காய் சேர்த்தால் பிடிக்காது......ஆனால் என்னவருக்கு அப்படி தான் பிடிக்கும்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

காரட் பீன்ஸ் பொரியல் .. ரொம்ப நல்லா இருந்தது. தேங்காய் சேர்க்கவில்லை..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

உங்களின் பின்னூடத்திற்கு நன்றி.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!