பாகற்காய் பிரட்டல்

தேதி: June 8, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (7 votes)

 

பாகற்காய் - 450 கிராம்
வெங்காயம் - 20 கிராம்
பூண்டு - 2 பற்கள்
புளி - 20 கிராம்
வெந்தயம் - 2 தேக்கரண்டி
கறித்தூள் - 2 தேக்கரண்டி
பால் - 15 மி.லி
உப்பு - ஒரு தேக்கரண்டி
சீனி - ஒரு தேக்கரண்டி


 

பாகற்காய் பிரட்டல் செய்ய மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
பாகற்காய், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
நறுக்கி வைத்திருக்கும் பாகற்காயை தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்து வாணலியில் போட்டு வெந்தயம், பூண்டு, வெங்காயம், உப்பு ஆகியவற்றை அதனுடன் போடவும்.
புளியை நன்கு கரைத்து ஊற்றி பாகற்காய் முழுவதும் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
பாகற்காயில் ஓரளவிற்கு தண்ணீர் வற்றி வெந்ததும் தூளை சேர்த்து வேக விடவும்.
நன்கு வெந்ததும் அதில் கறிவேப்பிலை மற்றும் பாலை சேர்க்கவும். பால் கட்டாயமாக சேர்க்க தேவையில்லை விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.
கறி பிரட்டலாக வந்ததும் சீனியை சேர்த்து பிரட்டி இறக்கி வைக்கவும்.
மருத்துவ தன்மை நிறைந்த பாகற்காய் பிரட்டல் ரெடி. இதனை சோறு, புட்டு, இடியப்பத்தோடு சாப்பிட சுவையாக இருக்கும். அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் <b> திருமதி. அதிரா </b> அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இந்த பக்கத்தை திறந்தவுடனேயே அது அதிரா மடம்தான் என்று புரிந்துகொண்டேன். எப்படிஎன்றால் பாவற்காய் பிரட்டல் வைத்திருக்கும் டிஷ்ன் மகிமை அப்படி.நான் முன்பொருநாள் உங்களிடம் கேட்டகேள்வி இது. இப்போது செய்து காட்டி அசத்திவிட்டிர்கள். மிக மிக நன்றி.நீங்கள் முன்பு குறிப்பிட்டதுபோல் பாவற்காயை வெட்டி உப்பு தண்ணிரில் உறவைத்து சமைத்து பார்த்தேன் நன்றாக வந்தது. இந்த முறையில் சமைத்து பார்த்தாலும் நன்றாக வரும் என்று நினைக்கினேன்.மீன்றும் ஒரு நன்றி மேடம்:) என்றென்றும் அன்புடன் ராணி.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நன்றி ராணி
பச்சைப்பாகற்காய் என்றால், உப்புத்தண்ணீரில் போட்டுப் பிளிந்தெடுத்தால் கைப்புத் தன்மை குறையும். இது வெள்ளைப்பாகற்காய் என்பதால்தான், உப்பைச் சேர்க்காமல் செய்யலாம்.

இனிமேல் இந்த டிஷ்க்கு பென்ஷன் கொடுக்க வேணும்:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா எனக்கு இப்ப ஒரு சந்தேகம் பால் என்பது பசும்பால் தானே சொல்கிறிர்கள்?இதுவரை நான் உங்கள் சமயலில் பசும்பாலை தான் பாவித்தேன் இனி தேங்காய்ப்பாலோ?

இதுபோல் நான் செய்தது இல்லை.இனி செய்து பார்க்கிறேன்.
உங்கள் சமையல் எல்லாவற்றிலும் பால் சேர்த்து செய்கிறீர்கள் இல்லியா?இதுபோல் பால் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு பிடிக்கிறது.
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

தளிகா, நான் பாவிப்பது பசுப்பால் தான். ஆனால் தேங்காய்ப்பாலாயின் முதல்பாலும் பாவிக்கலாம்.

இளவரசி, இதே முறையிலேயே தூள் சேர்க்காமல் செய்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

கண்ணு படப்போகுதம்மா ,
சூப்பர்,தொடர்ந்து குறிப்புக்கள் கொடுத்து வருவது மிக்க மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் அதிரா மேடம்
பாவக்காய் கறி சூப்பர்.நான் நாளை சமைத்து விட்டு சொல்கிறேன் எப்படி இருந்தது எண்டு.உங்களுடைய மீன் சோதி நேற்று வைத்தேன் ரொம்ப நல்லாய் இருந்தது குறிப்புக்கு நன்றி.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

ஹாய் அதிரா மேடம்
இன்று உங்கள் பாவக்காய் கறி வைத்தேன் ரொம்ப நல்லாய் இருந்தது. குறிப்புக்கு நன்றி.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

ஆசியா உங்கள் அன்பான ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

சுகா, நன்றாக வந்தது கேட்டு சந்தோஷமாக இருக்கு. மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் மேடம் இன்று பாவற்காய் பிரட்டல் செய்தேன் மிகவும் நன்றாக வந்தது.நன்றி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அதிரா,
இன்று உங்க பாகற்காய் பிரட்டல் தான்,இத்ந்ந் மாதிரியே செய்தேன்....சூப்பர்.இன்னும் இது போல் நிறைய ஈசி ரெஸிப்பிஸ் கொடுத்து அசத்துங்க.

மிகவும் நன்றி
உமா.

ராணி, உமா...
என் குறிப்பின்படி கறியைச் செய்துபார்த்து, அதை சொன்னதற்கும் மிக்க நன்றி. செய்துபார்த்து பின்னூட்டம் அனுப்பும்போது அதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பாகற்காய் பிரட்டல் நன்றாக இருந்தது. நான் பால் சேர்க்காமல் செய்தேன்.

நன்றிகளுடன்
ஸ்வர்ண

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

ஹாய் அதிரா அக்கா
உங்களின் பாகற்காய் பிரட்டல் மிகவும் சுவையாக இருந்தது.
எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
வழமையாக நான் கறி சமைப்பதில்லை. பொரித்து சம்பல் மட்டும்தான் செய்வேன்.

இது அவ்வளவாக கசக்கவும் இல்லை
நல்ல சுவையாகவும் இருந்தது.
இது போல வித்தியாசமான சமையலுக்காக காத்திருக்கின்றேன்.

அன்புடன் அதி

சுவர்ணா மிக்க நன்றி. பழப்புளி சேர்ப்பதால் பால்சேர்க்காவிட்டாலும் நன்றாகவே இருக்கும்.

அதி மிக்க நன்றி. நீண்ட நாள் காணவில்லை, ஆனாலும் என் சமையலுக்கு வந்துவிட்டீங்கள். இனித் தொடர்ந்து வருவீங்கள்தானே.
எந்த ஒன்றும் தொடர்ந்து செய்யும்போது ஒரு உஷாராக இருக்கும். இடையில் கைவிட்டால், பின்னர் தொடர்வது கஸ்டம். அப்படித்தான் தொடர்ந்து குறிப்புக்கள் கொடுத்தேன், இப்போ இடைவேளை விட்டதும், மீண்டும் செய்ய முழுமனம் இன்னும் வரவில்லை. வாழ்த்துக்கு நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இதை பார்க்கும் போதே மிகவும் அழகாக உள்ளது.ஆனால் எனக்கு சின்ன சந்தேகம், வெந்தயம் தூள் செய்து போடணூமா? பால் காய்ச்சி சேர்க்கணூமா?