பருப்பு கீரை பொரியல்

வழங்கியவர் : Vanitha Vilvaar...
தேதி : செவ்வாய், 09/06/2009 - 03:19
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- 1. பருப்பு கீரை - 2 கட்டு
- 2. பூண்டு - 5 பல்
- 3. எண்ணெய் - 2 தேக்கரண்டி
- 4. கடுகு - 1/4 தேக்கரண்டி
- 5. உப்பு - தேவைக்கு
- வறுத்து பொடிக்க:
- 1. வேர்கடலை - 2 மேஜைக்கரண்டி
- 2. சீரகம் - 1/2 தேக்கரண்டி
- 3. மிளகாய் வற்றல் - 1
- 4. மிளகு - 1/2 தேக்கரண்டி
- 5. தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி
- கீரையை சுத்தம் செய்து வைக்கவும். பூண்டை பொடியாக நறுக்கவும். வறுத்து பொடிக்க வேண்டிய அனைத்தையும் வெறும் கடாயில் வறுத்து பொடித்து வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கவும்.
- இதில் கீரை சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியதும், பொடித்த மசாலா சேர்த்து, உப்பு சேர்த்து கலந்து மூடி போட்டு கீரை வெந்ததும் எடுக்கவும்.
Note:
வெறும் சாதத்துடன், சாம்பார் சாதம், ரசம் சாதம் அனைத்துக்கும் பொருத்தமாக இருக்கும். காரம் உங்கள் ருசிக்கு மாற்றிக்கொள்ளவும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
1 min 9 sec முன்பு
4 நிமிடங்கள் 58 sec முன்பு
9 நிமிடங்கள் 6 sec முன்பு
18 நிமிடங்கள் 14 sec முன்பு
25 நிமிடங்கள் 16 sec முன்பு
30 நிமிடங்கள் 24 sec முன்பு
40 நிமிடங்கள் 19 sec முன்பு
42 நிமிடங்கள் 19 sec முன்பு
44 நிமிடங்கள் 13 sec முன்பு
56 நிமிடங்கள் 3 sec முன்பு