கற்கண்டு சாதம் - 2

தேதி: June 9, 2009

பரிமாறும் அளவு: 3 or 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

கற்கண்டு - அரை கப்
சர்க்கரை - அரை கப்
அரிசி - ஒரு டம்ளர்
பால் - ஏழு டம்ளர்
நெய் - பத்து மேசைக்கரண்டி
சாப்ரான்(குங்குமப்பூ) - மூன்று பின்ச்
வெள்ளை கலர் - ஒரு பின்ச்(தேவைப்பட்டால்)
முந்திரி - மூன்று
பாதாம் - மூன்று
திராட்சை - ஐந்து
பிஸ்தா- ஒரு தேக்கரண்டி
சிறிய கற்கண்டு - ஒரு தேக்கரண்டி(தேவைப்பட்டால்)


 

அரிசியை நன்றாக களைந்து ஏழு டம்ளர் பால் விட்டு வற்றும் வரை வேக விடவும்.
வற்றியதும் அரை கப் கற்கண்டையும், சர்க்கரையையும் போட்டு நன்கு கிளறவும்.
கற்கண்டும், சர்க்கரையும் கரைந்து சாதத்துடன் ஒன்றாக சேர்ந்ததும் ஐந்து மேசைக்கரண்டி நெய் விட்டு நன்கு கிளறவும்.
அல்வா பதத்திற்கு நன்றாக சுருண்டு வந்ததும் சாப்ரான் மற்றும் கலர்பவுடர் தூவி கிளறவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளற வேண்டும்.
அடுப்பை அணைத்து விட்டு வேறு ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள நெய் விட்டு முந்திரி, பாதாம், பிஸ்தா, திராட்சை வறுத்து கொட்டவும்.
சிறிய கற்கண்டுகளை போட்டு கலக்கவும்.


மேலும் சில குறிப்புகள்