பைங்கன் கா பர்தா

வழங்கியவர் : ammujan24
தேதி : செவ்வாய், 09/06/2009 - 10:46
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- எக் ப்ளான்ட் - 1 (அல்லது) பெரிய குண்டு கத்திரிக்காய் - 5
- பச்சை மிளகாய் - 7
- பெரிய வெங்காயம் - 1(1/2) கப் பொடியாக நறுக்கியது
- தக்காளி - 2 கப் நறுக்கியது
- பச்சை பட்டாணி - 1/2 கப்
- தனியா பொடி - 3 டீஸ்பூன்
- மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
- மிளகாய் பொடி - 1/4 டீஸ்பூன்
- மல்லி இல்லை - ஒரு கைப்பிடி
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
- உப்பு - தேவையான அளவு
- முதலில் எக் ப்ளானட் ( அல்லது) கத்திரிகாயில் ஆயில் தடவி அடுப்பில் போட்டு சுட்டு எடுக்கவும்.
- ஆறியதும் மேல் தோலை உரித்து எடுத்துவிட்டு மசித்து வைக்கவும்.
- கடாயில் ஆயில் விட்டு காய்ந்ததும் வெங்காயம் போட்டு சிவந்ததும் தக்காளி பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
- தக்காளி நன்கு மசிந்ததும் பச்சை பட்டாணி மற்றும் உப்பு போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
- உப்பு ஒன்று சேர்ந்ததும் நறுக்கிய கறிவேப்பிலையும் மல்லி இலையும் சேர்த்து மூன்று பொடிகளையும் சேர்த்து கிளறவும்.
- 1/2 டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும்.
- மசாலா சேர்ந்ததும் மசித்த கத்தரிக்காயை போட்டு கிளறவும்.
- பரிமாறும் முன்பு நெய் சேர்த்து பரிமாறவும்
Note:
இதை சாதத்துடன் சாப்பிட சுவை மிகவும் நன்றாக இருக்கும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
45 sec முன்பு
4 நிமிடங்கள் 34 sec முன்பு
8 நிமிடங்கள் 42 sec முன்பு
17 நிமிடங்கள் 50 sec முன்பு
24 நிமிடங்கள் 52 sec முன்பு
30 நிமிடங்கள் முன்பு
39 நிமிடங்கள் 55 sec முன்பு
41 நிமிடங்கள் 55 sec முன்பு
43 நிமிடங்கள் 49 sec முன்பு
55 நிமிடங்கள் 39 sec முன்பு