கிட்ஸ் பனானா மஃபின்

தேதி: June 9, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

மஃபின்ஸ் பிடிக்காத குழந்தைகள் இல்லை. அதை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்தானே. அதை செய்வது ஒன்றும் சிரமமில்லை. சொல்லப்போனால் மிகவும் எளிது.

 

மைதாமாவு – 2 கப் (250 gm)
சர்க்கரை - 1 1/4 கப் (150 gm)
கனிந்த வாழைப்பழம் – 3
வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
பால் - 2 மேசைக்கரண்டி
முட்டை - ஒன்று (பெரியது)
வெனிலா எசன்ஸ் - 1/4 தேக்கரண்டி (விருப்பமிருந்தால் மட்டும்)
உப்பு - ஒரு சிட்டிகை


 

மைதா மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். வாழைப்பழத்தை மசித்து வைக்கவும். சர்க்கரையை பொடி செய்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாக பீட்டரை வைத்து அடித்துக் கொள்ளவும். அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி மீண்டும் நன்கு அடிக்கவும்.
அதன் பிறகு வாழைப்பழக் கலவையை ஊற்றி அடித்து விட்டு பால் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து அடிக்கவும்.
கடைசியாக, சலித்த மைதா மாவை சிறிது சிறிதாக தூவி மரக்கரண்டியால் ஒரே சீராக கலக்கவும். (mix and fold method)
இப்பொழுது அவனை 350 F ல் வைத்து முற்சூடு செய்து வைக்கவும்.
நன்றாக கலந்தவுடன் அதை கப் மோல்டுகளில் பேக்கிங் (parchment) பேப்பர் போட்டு அதில் கலவையை ஊற்றி வைக்கவும். பேக்கிங் பேப்பர் இல்லையென்றால் வெண்ணெய் அல்லது பேக்கிங் ஸ்ப்ரே தடவி கலவையை வைக்கவும்.
கலவையை பேக்கிங் மோல்டுகளில் நிரப்பியதும், பேக்கிங் ட்ரேயில் அடுக்கி முற்சூடு செய்து வைத்திருக்கும் அவனில் 40 நிமிடங்கள் வைத்து (மஃபின் நன்றாக வெந்து பொன்னிறமாகும் வரை) எடுக்கவும்.
சில நேரங்களில் 5 நிமிடம் கூடவோ குறையவோ இருக்கலாம், அப்போது மஃபின் வெந்ததா என்பதை அறிய கத்தியை வைத்து குத்தி ஒட்டாமல் வருகிறதா என்பதை பார்க்கவும்.
மஃபின் வெந்து பொன்னிறமானதும் எடுத்து விடவும். சுவையான குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய பனானா மஃபின் ரெடி.
<b> திருமதி. இளவரசி </b> அவர்களிடம் பல வகையான மஃபின் செய்முறைகள் கைவசம் இருந்தாலும், இங்கு முதல் முறையாக செய்வதால், இதுவரை செய்ய தெரியாமலிருக்கும் தோழிகளுக்காக மிகவும் சுலபமான முறையை செய்து காட்டியுள்ளார். இதன் சிறப்பு என்னவென்றால், வழக்கமாக உபயோகிக்கும் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் போன்ற கெமிக்கல்ஸ் எதுவும் இதில் போடவில்லை. செய்து சுவைத்து மகிழுங்கள்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்(புதிதாக கேக் செய்து பழகுபவர்களுக்கு மட்டும், கைத்தேர்ந்தவர்களுக்கு அல்ல): மஃபின் கலவை தயாரிக்கும் முன் எல்லா பொருட்களும் அறை வெப்பநிலையில் இருக்க வேண்டும். முட்டை, வெண்ணெய் போன்றவற்றை ஒரு மணி நேரம் முன்பாக ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து வெளியில் வைக்கவும். கலவையில் இறுதியாகவே மாவை கலக்க வேண்டும். மாவு கலந்தபின் அதிகம் அடிக்க கூடாது. Stir and fold method-ல் தான் கலக்க வேண்டும். (Clockwise) ஒரே திசையில் கட்டியில்லாமல் கலக்கவும். கலவையை வைப்பதற்கு 5 நிமிடங்கள் முன் முற்சூடு செய்தால் போதும் எப்போதும் ட்ரேயை நடுவில்தான் வைக்க வேண்டும் (middle rack) அவனுக்கு அவன் temperature சிறிது வித்தியாசப்படலாம் என்பதால் ஆர்வமிகுதியில் அடிக்கடி திறந்து பார்த்தால் சரியாக வராது. அதனால் ஓவனில் உள்ள light-போட்டு பார்த்தால் தெரியும் கலர் மாறியிருப்பது. வாசனையும் வரும். பொன்னிறத்திலேயே எடுக்கவும், செந்நிறமாகும் வரை விடவேண்டாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மறுபடி மறுபடி அருமையான குறிப்புக்களோடு உங்களை பார்ப்பது மகிழ்ச்சி.இதில் இருப்பதும் உங்கள் மகளா?குழந்தைக்கள பெயர் என்ன?அப்புறம் ப்ரவுன் கலரில் சேர்த்திருப்பது வெனிலா எசன்ஸ் தானா?கால் தேக்கரண்டி என்று சொல்லியிருக்கீங்க,ஆனால் அதிகமாக தெரியுதே,அல்லது கேரமல்,சாக்லேட்,கொகோ பவுடரா?விபரம் தெரிவிக்கவும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

பின்னூட்டத்திற்கு நன்றி.
போட்டோவில் இருப்பது என் ரெண்டாவது மகன்(2 வயது)
அப்புறம் அந்த குறிப்பில் நீங்கள் குறிப்பிட்டு
கேட்பது பனானா அரைத்த கூழ்தான்...
அதில் பனானாவை அரைப்பதற்கு முன் போட்டோ
எடுக்க miss பண்ணி விட்டேன் .கனிந்த பழம்
விதைகளெல்லாம் அரைபட்டதால் ப்ரவுன் கலரில் தெரிகிறது..பயந்து விட்டீர்களா?
உங்கள் பிள்ளைகளுக்கு என் அன்பை கூறவும்.
நாச்சியா இந்தியாவில் எங்கள் வீட்டிற்கு கூட
ஒரு முறை வந்திருக்காங்க..
நன்றி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய் இளவரசி
உங்கள் மகள் நல்லா அழகாக இருக்கிற.
உங்களுடைய்ய மப்பின் நல்லா அழஅகாக படம் பிடித்திருக்கிரிர்கள் சுலபமான முறை நல்லா விளக்கத்துடன் நன்றி.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

போட்டோவில் இருப்பது ரெண்டாவது மகன்(2வயது..)
அவனை போட்டோஎடுக்க நினைக்கவில்லை.ஆனால்
கேக் எடுத்து ஆறியதும் தரலாமென வைத்திருந்தேன்.
அவன் எனக்கு தெரியாமலே எடுத்து கொண்டு போய் தானாக தனியாக உட்கார்ந்து சாப்பிட்டான்.அதை மகள் பார்த்துவிட்டு சொன்னதும் அவனுக்கு தெரியாமல் ஒரு க்ளிக் எடுத்தேன்...அதுதான் இது

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

Hi,
It's looking very nice.

Regards,
MythiliThiyagu

அன்பு இளவரசி,

இன்னிக்கு கிட்ஸ் பனானா மஃபின் கேக் செய்தேன். ரொம்ப நல்லா வந்தது. ரொம்ப ரொம்ப தாங்க்ஸ், இளவரசி.

கேக் செய்து பார்க்க வேண்டும் என்பது வெகு நாள் ஆசை. 3 வாரத்துக்கு முன்னால், சிம்பிளான ஒரு கேக், ட்ரை செய்து பார்த்தேன். சரியாக வரலை. உங்க குறிப்புகளில், தித்திக்கும் தேன் கேக், மற்றும் சில குறிப்புகளையும் படிச்சுப் பார்த்தேன். இந்தக் குறிப்பில், பொறுமையாக, ஸ்டெப் பை ஸ்டெப் ஆகக் கொடுத்திருப்பதைப் பார்த்ததும், திரும்பவும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றியது.

முட்டை சேர்க்கலை. மைதா மாவுடன், பேக்கிங் சோடா சிறிதளவு சேர்த்துக் கொண்டேன். நீங்க கொடுத்திருக்கும் அளவுகளில், சரி பாதி எடுத்து, செய்து பார்த்தேன். சூப்பராக வந்தது. ரொம்ப சந்தோஷமாக இருக்கு எனக்கு.

அப்ஸராவின் ஈஸி தம் கேக் செய்முறையையும் அடிக்கடிபடிச்சுப் பாத்துட்டே இருப்பேன். அதையும் செய்து பார்க்கணும்.

விளக்கமாக, செய்முறை கொடுத்திருக்கீங்க, மிகவும் நன்றி, இளவரசி.

இந்தக் குறிப்பைப் படிச்சுப் பார்த்ததில் இன்னும் ஒரு சந்தோஷம், உங்க மகன் புகைப்படத்தைப் பார்த்தது! ரொம்ப க்யூட் ஆக இருக்கார், வாழ்த்துக்கள் அவருக்கு!

அன்புடன்

சீதாலஷ்மி

அறுசுவையில் எனக்கு மிகவும் பிடித்த உங்ககிட்ட இருந்து அன்பான பின்னூட்டம் ..

நல்லவேளை நான் பார்த்தபோது முகப்பில் இருந்தது..இல்லேன்னா பார்க்காமலே விட்டிருப்பேன்..
:-)
கேக் நல்லா வந்ததில் மிக்க சந்தோஷம்மா..

ரொம்ப நன்றிம்மா

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நன்றி மீனு செஞ்சு பார்த்துட்டு இதே சொன்னா ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.