பிஸ்கெட் அல்வா

தேதி: June 9, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மில்க் பிஸ்கட் - 10
பால் - 1/4 கப்
சர்க்கரை - 1/2 கப்
நெய் - 1/2 கப்
முந்திரித்தூள்(வறுத்து பொடித்தது) - 1/4 கப்


 

முதலில் பிஸ்கட்களை தூளாக பொடிக்கவும்.
பின் முந்திரிப்பருப்புகளை கொஞ்சம் எடுத்து வறுத்து பொடிக்கவும்
பின் வாணலியில் பொடித்த தூள்கள், பால், சர்க்கரை, நெய் விட்டு மிதமான தீயில் அல்வா பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.


மிக சுலபமாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்க கூடிய ஸ்வீட் இது.
முந்திரிக்கு பதில் பாதாம்/பிஸ்தா கூட வறுத்து பொடித்து போடலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இளவரசி அக்கா சூப்பரா இருந்தது உங்கள் பிஸ்கட் அல்வா. மானு ரொம்ப விரும்பி சாப்பிட்டாள். எளிமையாகவும் இருந்தது. மிக்க நன்றி.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!