காபேஜ் கோப்தா கறி

தேதி: June 10, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோப்தாவிற்கு:
கோஸ் - அரை
கடலைப்பருப்பு - மூன்று டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - மூன்று
கடலை மாவு - கால் டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
கிரேவிக்கு:
வெங்காயம் - ஒன்று
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பூண்டு - இரண்டு பல்
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன்
சீராக தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லி தூள் - மூன்று டீஸ்பூன்
தயிர் - ஒரு கப்
எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்


 

கோப்தா:
கோஸ்ஸை பொடியாக கட் பண்ணி கடலைப்பருப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து கொள்ள வேண்டும்.
வெந்ததும் நீரை நன்றாக வடித்து ஆறியதும் கோஸ்சில் உள்ள நீரை பிழிந்து எடுத்து வைக்கவும்.
சீரகம், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.
கடலை மாவு, அரிசி மாவு கலவையை சேர்த்து கோஸ்சில் போட்டு பச்சை மிளகாயை சேர்த்து லேசாக நீர் தெளித்து பிசைந்து ஐந்து நிமிடம் வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் கைய விட வேண்டும்.
காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவுக்கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
எண்ணெயில் போட்டவுடன் கரண்டியால் திருப்பக்கூடாது. உடைந்துவிடும்.
எண்ணெயில் சேர்த்து கோப்தா பொரிந்து மேல் எழும்பி வரும் பின்பு தான் திருப்பலாம்.
இப்பொழுது கோப்தா ரெடி.
கிரேவி:
கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். லேசாக வதங்கினாலே போதும்.
அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். அனைத்து தூள்களையும் தயிரில் கலந்து அடுப்பில் ஊற்றவும்..
திக்காக இருந்தால் சிறிது தண்ணீர் விடலாம்.
கொதிக்க ஆரம்பித்ததும் உப்பு சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
நுரைத்து வந்ததும் பொரித்து வைத்துள்ள கோப்தாக்களை கலவையில் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
மேலே மல்லி இலை தூவி பரிமாறவும்.
காபேஜ் கோப்தா கறி தயார்.


இதனை வெறும் சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.அனைத்து சப்பாத்தி,ரொட்டி வகைகளுக்கும் மிக பொருத்தமாக இருக்கும்.
கொஞ்சம் நீர்க்க செய்தால் சூப் போலவும் குடிக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்