சிக்கன் சூப்

வழங்கியவர் : DHUSHYANTHY
தேதி : புதன், 10/06/2009 - 13:45
ஆயத்த நேரம் : (30-45) நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : (30-45) நிமிடங்கள்
பரிமாறும் அளவு : (1-2) நபர்களுக்கு
- சிக்கன் (வெட்டி சுத்தம் செய்ததுண்டுகள்) - 250 கிராம்
- பெருஞ்சீரகம்(சோம்பு) - ஒரு தேக்கரண்டி
- மிளகு - 3 தேக்கரண்டி
- வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
- சின்னசீரகம்(சீரகம்) - ஒரு தேக்கரண்டி
- மல்லி(தனியா) - ஒரு தேக்கரண்டி
- செத்தல்மிளகாய் (காய்ந்தமிளகாய்) - 2
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
- கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
- உள்ளி (பூண்டு) - 4 பற்கள்
- சின்னவெங்காயம் - 2
- தக்காளிப்பழம் - ஒன்று
- கருவப்பட்டை(பட்டை) - சிறிதளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- தயிர் - சிறிதளவு
- தண்ணீர் - சிறிதளவு
- ஒரு சிறியபாத்திரத்தில் தயிர், உப்பு, தண்ணீர், ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கினால் மோராகிவிடும் .
- பின்பு ஒரு பெரிய பாத்திரத்தில் சுத்தமாக்கிய சிக்கன் துண்டுகளை போட்டு அதன் மேல் மோரை விடவும். இதில் உள்ள மோர் கலவையினால் சிக்கனை நன்றாக கழுவவும்.
- பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கவும். தாட்சி(வாணலி)சூடானதும் அதில் சின்னசீரகம்(சீரகம்), மல்லி(தனியா), செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்) கடலைப்பருப்பு, மிளகு ஆகியவற்றை போட்டு நன்றாக வறுக்கவும்.
- நன்றாக வறுத்த பின்பு அதில் வெந்தயத்தை போட்டு கலக்கவும். கலந்த பின்பு இறக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவிடவும்.
- இவையாவும் ஆறிய பின்பு இதனை கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு மாவாக்கவும் (பவுடராக்கவும்).
- பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து அதனை சூடாக்கவும். தாட்சி (வாணலி) சூடானதும் அதில் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் மோரில் கழுவிய சிக்கனை போட்டு வதக்கவும்.
- வதக்கிய சிக்கனுடன் நறுக்கிய தக்காளிப்பழம், சின்ன வெங்காயம், உள்ளி(பூண்டு), கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.
- பின்பு இவற்றுடன் மாவாக்கியவற்றை (பவுடராக்கியவற்றை) போட்டு நன்றாக கலக்கவும்.
- கலந்த பின்பு இதனுடன் (2-3) டம்ளர் தண்ணீர் விட்டு அதனுடன் உப்பு போட்டு இவையாவற்றையும் நன்றாக வேகவிடவும்.
- பின்பு அடுப்பில் இன்னொரு தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கவும்.
- சூடாக்கிய பின்பு அதில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் அதில் பெருஞ்சீரகம்(சோம்பு), கருவப்பட்டை(பட்டை), கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
- தாளித்த பின்பு இவற்றை சிக்கனில் போட்டு கலக்கவும். அதன் பின்பு அதனை இறக்கி வைத்துவிடவும்.
- தாட்சியை(வாணலியை)இறக்கிய பின்பு சுவையான, சத்துகள் நிறைந்த சிக்கன் சூப் தயாராகிவிடும்.
- சிக்கன் சூப் தயாராகிவிட்ட பின்பு இதனை சூப் பரிமாறும் கோப்பையில் ஊற்றி பரிமாறவும்.
Note:
சிக்கன் சூப் உடல் வலியை தீர்க்ககூடியதும், மழை, குளிர் காலங்களுக்கும் ஏற்றதும் சுவையானதும் சக்தி(Energy) ஈரப்பதம்/நீர்Moisture), புரதம்(Protein), கொழுப்பு(Fat), தாதுக்கள்(Minerals), கால்சியம்(Calcium), பாஸ்பரஸ்(Phosporous), ரைப்போஃப்ளேவின்(Riboflavin), போலிக் அமிலம்(Folic acid) ஆகிய சத்துகள் நிறைந்ததும் ஆகும். ஆகவே இதில் உள்ள சத்துகளையும் சுவையையும் அறிய சிக்கன் சூப்பை செய்து சாப்பிட்டு அறியவும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
i tried this soup and its very tasty..my son is 3year old..he loved it a lot.thanks for this recipe.
poornima