பிரஸ்ட் பம்பிங் மிஷன்

பிரஸ்ட் பம்பிங் மிஷன் உபயோகிப்பது நல்லதா? நல்லது என்றால் பிரஸ்ட் பம்பிங் மிஷன் ஆடோமடிக் மாடல் வாங்குவது நல்லதா அல்லது மேன்வல் மாடல் நல்லதா? யாராவுது உபயோகித்து இருந்தால் அதை எப்புடி உபயோகிப்பது என்று சொல்லவும்.மார்பில் ஒட்டி கொள்ளும் நிப்புள் வகைகளில் எது குழந்தைக்கு ஏற்றது. எனக்கு உதவுங்கள் பிரெண்ட்ஸ்

குழந்தை பிறந்த பின் பிரஸ்ட் பம்ப் உபயோகிப்பதால் எந்த கெடுதலும் இல்லை. உபயோகித்த பிரஸ்ட் பம்ப் வேண்டாம். புதிது பெஸ்ட். சில நேரங்களில் மருத்துவர்களே உபயோகிக்க சொல்லுவார்கள். தேவையை பொருத்தது manual அல்லது battery operated. மானுவல் வாங்கினால் செலவு குறைச்சல் வேலை அதிகம் அவஸ்தையும் அதிகம். ஒரு நேரத்தில் ஒரு மாபகத்தில் இருந்து தான் பம்ப் பண்ண முடியும். அதையே ஆடோமடிக் விலை கூடுதல், பல வகைகளில் நமது வசதிகேற்ப உள்ளது.

பிரஸ்ட் பும்பில் ஒரு கோன் வடிவில் உள்ளதை மார்பின் மேல் பொருத்தி அதில் உள்ள பட்டனை ஆன் செய்தால் பால் தானாக இணைக்கப்பட்டுள்ள குடுவையில் சேரும். கோன் சிளிகனாக இருக்க வேண்டும்.

நிப்பள் ஷீல்ட் பொதுவாக inverted அல்லது flat nipples உள்ளவர்கள் பயன்படுத்துவார்கள். நீங்கள் அதை sore nipples உள்ள போதும் பயன் படுத்தலாம். இதில் silicon தான் பெஸ்ட் அதிலும் நம் உடலுடன் ஒட்டிக்கொள்ள வேண்டும். சரியான சைஸ் பார்த்து வாங்கவும்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மிக தெளிவாக அழகாக விளக்கி பதில் தந்தமைக்கு மிக்க நன்றி தோழி

மேலும் சில பதிவுகள்