சோள லட்டு

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு: 15 லட்டுகள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சீனி - அரை கிலோ
சோளம் - அரை கிலோ
முந்திரி - 25 கிராம்
செர்ரிபழம் - 25 கிராம்
எண்ணெய் - கால் கிலோ
நெய் - 50 கிராம்


 

சோளத்தை நைசாக அரைக்கவும். பிறகு காட்டன் துணியில் சலிக்கவும். அல்லது மெல்லிய மாவு சல்லடையில் சலித்துக் கொள்ளலாம்.
சலித்த மாவுடன் 300 மில்லி தண்ணீர் ஊற்றி கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்றாக கரைக்கவும்.
மிகவும் தண்ணீராக கரைத்து விடக் கூடாது. கெட்டியாகவும் இருக்கக் கூடாது. பூந்தி தோய்க்கும் அளவிற்கு பதமாக இருக்க வேண்டும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி 5 நிமிடம் சூடேற்றவும். பிறகு கரைத்த மாவுடன் நெய்யை கலந்து சாரணி அல்லது பூந்தி கரண்டியில் தோய்த்து எண்ணெயில் ஊற்றவும்.
10 நிமிடம் வேக வைத்து, பூந்திகளை எடுத்து பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
இப்போது ஜீராப்பாகினைத் தயாரிக்கவும். அரை கிலோ சீனியுடன் 150 மில்லி தண்ணீர் சேர்த்து வாணலியில் கொதிக்க வைத்து பாகாய் காய்ச்சிக் கொள்ளவும். பாகு சற்று கெட்டியாகவே இருக்க வேண்டும்.
முந்திரி, செர்ரி, பூந்தி இவை மூன்றையும் காய்ச்சிய பாகில் கொட்டி கிளறி லட்டாக பிடித்து வைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்