பஞ்சாபி பொட்டடோ

வழங்கியவர் : Vijitvm
தேதி : வெள்ளி, 12/06/2009 - 02:03
ஆயத்த நேரம் : 10
சமைக்கும் நேரம் : 20
பரிமாறும் அளவு : 5
- உருளை - 2
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- கேப்சிகம் - 1
- மசாலா
- ---------
- மஞ்சள் தூள் - 1/2 தே.க
- மிளகாய் தூள் - 1 தே.க
- தனியா தூள் - 1/2 தே.க
- சீரக தூள் - 1/2 தே.க
- பட்டை - 1 துண்டு
- பெருஞ்சீரகம் - 1/4 தே.க
- எண்ணெய்+நெய் - 1 தே.க
- உப்பு - தேவைகேற்ப்ப
- எல்லா காய்கறிகளையும் நல்ல பெரிய சதுர துண்டுகளாகக்கவும்.
- ஒரு பானில் எண்ணெய்+நெய் விட்டு பட்டை, பெருஞ்சீரம், போட்டு
- பொரிந்ததும் காய்கறிகளையும் போட்டு வதக்கி
- கொஞ்சம் தண்ணிர் விட்டு, உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்கவும்.
- பாதி வெந்தததும் மசாலா தூள்களை போட்டு
- நன்றாக கிளறி விட்டு மூடி வைக்கவும்.
- பத்து நிமிடம் கழிந்து கிளறி விட்டு மேலும் ஐந்து நிமிடம் வேகவிடவும்,
- கொத்தமல்லி இலை போட்டு அலங்கரிக்கவும்.
- இது ரொட்டி,பராத்தாவுக்கு நல்ல சைட் டிஷ்.
Note:
இதில் கேப்சிகம் நிறய்ய நேரம் வத்க்கவேண்டாம்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
விஜி உங்களுடைய குறிப்பில் இருக்கும்
பஞ்சாபி பொட்டடோ மிகவும் நன்றாக இருந்தது.
.
நன்றி
ஸ்வர்ணா
நன்றிகளுடன்
ஸ்வர்ணா