ஆரஞ்சு லஸி

தேதி: June 13, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆரஞ்சு பழம் - மூன்று
கெட்டியான தயிர் - இரண்டு கப்
சர்க்கரை - இரண்டு மேசைக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
சினமன் பௌடர் - ஒரு சிட்டிகை(தேவைப்பட்டால்)


 

ஆரஞ்சு பழத்தை தோல் உரித்து எடுத்து, அதன் உள்ளிருக்கும் விதைகளை நீக்கி கொள்ளவும்.
ஆரஞ்சு தோல் உரிக்கும் போது ஓரே சீராக ஏதேனும் ஒரு வடிவத்தில் வருமாறு உரித்து வைத்துக் கொள்ளவும்.
தயிரை நன்றாக அடித்து எடுத்துக் கொள்ளவும்.
சினமனை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
ஆரஞ்சை கூழ் போல அரைத்து அதனுடன் தயிர், சர்க்கரை, உப்பு சேர்த்து மேலும் சில நிமிடங்கள் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
உரித்து வைத்திருக்கும் ஆரஞ்சு தோலில் லஸியை ஊற்றி மேலே பொடி செய்த சினமனை தூவி பரிமாறவும்.
சுவையான ஆரஞ்சு லஸி ரெடி. இதுவரை அம்முஜான் 24 என்ற பெயரில் கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் குறிப்புகள் வழங்கிக் கொண்டிருந்த <b> திருமதி. அம்மு மது </b> அவர்கள் செய்முறை விளக்கப்படங்களுடன் வழங்கியுள்ள குறிப்பு இது. இதைப் போல் இன்னும் பல குறிப்புகளை நம்முடன் பகிர்ந்துக் கொள்ள உள்ளார்.

ஆரஞ்சை அரைத்தவுடன் 1 1/4 கப் அளவு இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இந்த லஸி செய்யும் போது ஆரஞ்சை அரைத்தவுடன் வடிகட்ட கூடாது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..இவ்வளவு சீக்கிரம் என் ரெசிப்பி போஸ்ட் பண்ணினதுக்கு.

அன்புடன்,
அம்மு.

அன்புடன்,
அம்மு.

அம்மு உங்கள் ஒரேஞ் லஸி நன்றாக இருக்கு. அதெப்படி தோலை இவ்வளவு அழகாக வெட்டியிருக்கிறீங்கள்?. நான் நினைத்தேன் மங்கோ லஸிதான் இருக்கென்று. எல்லாப் பழங்களிலும் செய்யலாமோ? அதுசரி இதுதான் உங்கள் முதல் குறிப்போ படத்துடன்?.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சமையல் செய்யறது ஒரு கலைன்னா அத அழகா ப்ரெசென்ட் பண்றது இன்னொரு கலை....நீங்க ப்ரெசெண்ட் பண்ணியிருக்கற விதம் அற்புதம்...

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ரொம்ப நன்றி அக்கா..எல்லா பழங்களிலும் நான் செய்ததில்லை.ஆரஞ்சு,நவ்வாப்பழம்,கொய்யா,மாம்பழம் இவற்றில் செய்துள்ளேன்.அமாம்.இது தான் என் முதல் குறிப்பு படத்துடன்.செய்து பார்த்து விட்டு எப்படி இருந்ததென்று சொல்லுங்கள்.

அன்புடன்,
அம்மு.

அன்புடன்,
அம்மு.

நலமா?உங்கள் பாராட்டு குறித்து மிக்க மகிழ்ச்சி.கண்டிப்பாக செய்து பார்த்து விட்டு கருத்தை சொல்லுங்கள்...

அன்புடன்,
அம்மு.

அன்புடன்,
அம்மு.

ஹாய் அம்மு
நல்ல அழாகாக ஒரேஞ் கட் பன்னிருக்கிரிர்கள்.குழைந்தகளுக்கு நல்ல பானம் குறிப்புக்கு நன்றி.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அம்முவின் ஆரஞ்சு லஸி மிகவும் அழகாக உள்ளது பார்க்கும்போதே பருகசொல்லுதே. சூப்பராய் இருக்கு படங்கள் எல்லாம். சினமன்னுக்கு பதிலாக கண்டோஸ் துள் செய்து போடலாமா? இது ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சுகா பாராட்டிற்கு மிக்க நன்றி.ராணி நான் இது வரை சினமன் தவிர வேறு எந்த தூளும் பயன்படுத்தினதில்லை.எனக்கு தெரிந்தவரை ஆரஞ்சுக்கு சினமன் தான் பொருத்தமாக இருக்கும்.நீங்கள் வேறு எதாவது ட்ரை பண்ணி நன்றாக வந்தால் சொல்லுங்க..நானும் ட்ரை பண்ணி பாக்றேன்..நன்றி.

அன்புடன்,
அம்மு.

அன்புடன்,
அம்மு.

ammu avargaluku,

unga orange lassi romba nalla irundadu.na pona varam daan inda site kul vanden ,appo daan ungaloeda inda lassi parthu try seide romba arumayaga irundadu.enga veetu kutty ada ice cream nu ninaichu kettu vangi 1 cup fulla ava sapta .Thanks for ur recipe.