வெண்டைக்காய் வறுவல்

தேதி: June 14, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

1. வெண்டைக்காய் - 1/4 கிலோ
2. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
3. சீரகம் - 1/2 தேக்கரண்டி
4. பெருங்காயம் - 1 சிட்டிகை (விரும்பினால்)
உள்ளே வைக்க:
1. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
2. மல்லி தூள் - 2 தேக்கரண்டி
3. மஞ்சள் தூள் - சிறிது
4. உப்பு - சுவைக்கு
5. அம்சூர் பொடி - 1/2 தேக்கரண்டி
6. பெருஞ்சீரகம் (வறுத்து பொடித்தது) - 1 தேக்கரண்டி (விரும்பினால்)


 

பொடி வகைகளை கலந்து வைக்கவும். வெண்டைக்காய்களை கழுவி, ஈரம் இல்லாமல் துடைத்து வைக்கவும். காய்களை கத்தியால் கீரவும். நடுவே கலந்த பொடிகளை வைத்து மூடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சீரகம், பெருங்காயம் தாளித்து வெண்டைக்காய்களை சேர்த்து மூடி சிறுந்தீயில் வேக வைத்து எடுக்கவும்.
காய்கள் கலர் மாறாம பார்த்துக்கவும்.


விரும்பினால் தாளிக்கும்போது சிறிது தேங்காய் துருவல் சேர்க்கலாம். முத்தாத காய் உபயோகிப்பது நல்ல சுவை தரும். தயிர் சாதத்துக்கு பொருத்தமாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்