பஞ்ச கல்யாணி

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - ஒரு கப்
ரவா - ஒரு கப்
உளுத்தம் மாவு - ஒரு கப்
அரிசி மாவு - ஒரு கப்
ஜவ்வரிசி - ஒரு கப்
தண்ணீர் - 4 கப்
முந்திரிப் பருப்பு - 50 கிராம்
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 100 கிராம்
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

ஒரு பெரிய பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
கொதித்த தண்ணீரில் ஜவ்வரிசி, துருவிய தேங்காய் மற்றும் முந்திரி பருப்பு சேர்க்கவும். அதன் பின் உப்பு, மிளகாய் தூள் சேர்க்கவும்.
இதனை 2 அல்லது 3 நிமிடம் கொதிக்க வைத்து பிறகு மைதா, ரவா, உளுத்தம் மாவு, அரிசி மாவு சேர்த்து, ஒரு மரக்கரண்டி கொண்டு மாவாக பிசையவும்.
பிறகு அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். ஆறியதும் சின்ன உருண்டையாக உருட்டி சப்பாத்தி மிஸினில் வைத்து அழுத்தவும்.
அழுத்தியதை எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இதற்கு வெங்காயம் அல்லது தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடவும்.


மேலும் சில குறிப்புகள்