ஜூட் லெட்டர் பை

தேதி: June 15, 2009

5
Average: 4.5 (2 votes)

 

ஜூட் துணி - மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள்
மார்க்கர்
கத்திரிக்கோல்
ஊசி
நூல்
பைப்பிங் டேப்
இன்ச் டேப்
எம்பிராய்டரி வளையம் - 4
கண்ணாடி வில்லைகள்
சம்கி

 

லெட்டர் பை செய்ய தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டு கொடுத்திருக்கும் அளவிற்கு ஜூட் துணியை நறுக்கி கொள்ளவும்.
மஞ்சள் நிற ஜூட் துணியை 20 இன்ச் நீளம், 9 இன்ச் அகலம் என்ற அளவிற்கு நறுக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இதேப் போல் சிவப்பு நிற ஜூட் துணியில் நறுக்கி எடுத்துக் கொண்டு அதை 6 1/2 இன்ச் நீளம், 9 இன்ச் அகலம் என்ற அளவிற்கு இரண்டு தனித்தனி துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். மீண்டும் மஞ்சள் நிற ஜூட் துணியில் 6 1/2 இன்ச் நீளமும், 9 இன்ச் அகலமும் என்ற அளவிற்கு ஒரு துண்டு மட்டும் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
6 1/2 இன்ச் நீளத்தில் நறுக்கி வைத்திருக்கும் மஞ்சள் நிற ஜூட் துணியை பின்புறம் திருப்பி வைத்து அகலத்தில் ஏதேனும் ஒரு பகுதியை கால் இன்ச் அளவிற்கு மடித்து தைக்கவும். இதே போல் நறுக்கி வைத்திருக்கும் ஒரு சிவப்பு நிற ஜூட் துணியையும் தைத்துக் கொள்ளவும்.
மற்றொரு சிவப்பு நிற ஜூட் துணியில் நல்ல பக்கத்தை மேலே வைத்து அதன் அகலமான பகுதியில் ஏதேனும் ஒரு பகுதியின் ஒரத்தில் பைப்பிங் டேப்பை வைத்து அதில் ஜூட்டை உள்ளே வைத்து மடித்து தைக்கவும். (படத்தில் உள்ளபடி)
அதன் பிறகு அதை தொடர்ந்து ஏற்கனவே ஓரத்தை தைத்து வைத்திருக்கும் ஒரு மஞ்சள் மற்றும் ஒரு சிவப்பு துணியின் நல்லப் பக்கத்தை மேலே வைத்து மடித்து தைக்காத மகுதியில் முன்பு சொன்னது போல சிவப்பு துணிக்கு தைத்தது போல் பைப்பிங் டேப்பை வைத்து தைக்கவும்.
அதை ஒவ்வொரு ஜூட் துணி துண்டுகளாக நறுக்கி தனியே வைத்துக் கொள்ளவும். (அதில் ஒரு மஞ்சள் மற்றும் ஒரு சிவப்பு துண்டுகளில் மட்டும் ஒரு புறத்தில் பைப்பிங் டேப்பும் ஒரு பக்கத்தை சாதாரணமாக மடித்து வைத்தும் தைத்து இருக்க வேண்டும். மற்றொரு சிவப்பு துண்டில் ஒரு அகலமான பக்கத்தில் மட்டும் பைப்பிங் டேப்பை வைத்து தைக்கவும்.)
தைத்த எல்லாத் துண்டுகளின் நடுவிலும் எம்பிராய்டரி வளையத்தை வைத்து சுற்றிலும் தைக்கவும். அதைப் போல் நறுக்கி வைத்திருக்கும் பெரிய மஞ்சள் நிற ஜூட் துண்டிலும் மேல் புறம் ஒரு இன்ச் அளவிற்கு கீழே இறக்கி நடுவில் வளையத்தை வைத்து தைக்கவும்.
பைப்பிங் டேப்பை 3 இன்ச் அளவு எடுத்துக் கொண்டு அதன் அகலத்தை இரண்டாக மடித்து தைத்துக் கொள்ளவும். பெரிய அளவில் நறுக்கி வைத்திருக்கும் மஞ்சள் நிற ஜூட் துணியில் (9x20) மேலே பின்புறம் திருப்பி, தைத்து வைத்திருக்கும் பைப்பிங் டேப்பை இரண்டாக மடக்கி கைப்பிடிப் போல தைக்கவும்.
பெரிய அளவில் உள்ள மஞ்சள் நிற ஜூட் துணியில் இரண்டு ஓரங்களையும் உட்புறமாக மடக்கி படத்தில் உள்ளது போல் நறுக்கிக் கொள்ளவும்.
இப்போது பெரிய மஞ்சள் நிற ஜூட் துணியின் (9x20) ஓரத்தை நறுக்கிய பகுதியிலிருந்து 10 இன்ச் கீழே இறக்கி அடியில் மடித்து தைத்திருக்கும் சிவப்பு நிற துணியை வைத்து தைக்கவும்.
பிறகு 15 வது இன்சில் மஞ்சள் நிற துணியை வைத்து தைக்கவும். அதன் பிறகு 20 வது இன்சில் (அடிப்பகுதியில்) மற்றொரு சிவப்பு நிற துணியை வைத்து தைக்கவும்.
பின்புறம் திருப்பி வைத்து மேலிருந்து கீழ் வரை ஒரே சீராக, இடது மற்றும் வலது புற ஓரங்களில் தைக்கவும்.
மேலே கைப்பிடி தைத்திருக்கும் இடத்தில் இருந்து பைப்பிங் டேப்பை வைத்து லெட்டர் பையின் ஓரங்களில் சுற்றிலும் தைக்கவும்.
நான்கு ஓரங்களில் தைக்கும் போது மட்டும் டேப்பை மடக்கி வைத்து தைக்கவும்(படத்தில் உள்ளதுப்போல்). ஆரம்பித்த இடத்திற்கு வந்ததும் டேப்பை நறுக்கி விட்டு மடக்கி வைத்து தைத்து விடவும்.
தைத்து முடிந்ததும் லெட்டர் பையில் சம்கி மற்றும் கண்ணாடி வில்லைகளை ஒட்டி அலங்கரிக்கவும்.
சம்கிகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட அழகிய ஜூட் லெட்டர் பை ரெடி.
இந்த ஜூட் லெட்டர் பையை செய்து காட்டியவர் திருமதி. எஸ்தர் அவர்கள். கூடைகள் பின்னுதல், அலங்காரப் பொருட்கள் செய்தல், பொம்மைகள் செய்தல் என அனைத்து வகை கைவினைப் பொருட்கள் செய்வதிலும் முறையான பயிற்சி எடுத்து திறன் வளர்த்துக்கொண்டவர்

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

திருமதி. எஸ்தர் லெட்டர் பை ரொம்ப அழகா இருக்கு செய்முறையும், போட்டோவும் ரொம்ப தெளிவா இருக்கு...இதே மாதிரி நான் துணியில் செய்துள்ளேன்.. நன்றி.

அன்புடன்
ஹாஷினி.

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

This is very useful to all. Thank u very much.

with love
shameema

Hi Sister,

Its very nice and simple method.. Thanku.. Kindly guide me where it is available (in Tirupur) and its price..

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta