ஓட்ஸ் வெஜ் ஊத்தாப்பம்

தேதி: June 15, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (12 votes)

6 வயது குழந்தை முதல், 60 வயது பெரியவர் வரை எல்லோருக்கும் எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு ஓட்ஸ். ஸ்காட்லாந்து மக்களின் முக்கிய உணவான ஓட்ஸ், நிறைய வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது. இதில் உள்ள நார்சத்து (soluble fibre) நம் உடலிலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது. அப்புறமென்ன, இனிமேல் ஓட்ஸ் என்றால் உங்கள் நினைவுக்கு வருவது கஞ்சி மட்டுமில்லை. இந்த ஊத்தாப்பமும்தான். இதை சூடாக சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். நல்ல ஒரு தகவலுடன் இந்த ஓட்ஸ் வெஜ் ஊத்தாப்பம் குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. இளவரசி </b> அவர்கள்.

 

ஒட்ஸ் – ஒரு கப்
ரவை - கால் கப்
கடலைமாவு - கால் கப்
மோர் – 2 கப் (கரைப்பதற்கு தேவையான அளவு)
கேரட் - 2 மேசைக்கரண்டி
முட்டைகோஸ் - 2 மேசைக்கரண்டி
குடைமிளகாய் – 2 மேசைக்கரண்டி
தேங்காய்துருவல் - ஒரு மேசைக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
முந்திரி பருப்பு(பொடித்தது) - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவையான அளவு


 

கேரட், முட்டைகோஸ், குடைமிளகாய் எல்லாவற்றையும் மெல்லியதாக நறுக்கி வைக்கவும். தேங்காயை துருவி வைக்கவும். மிளகு, சீரகம், முந்திரிபருப்பு மூன்றையும் ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஓட்ஸ் மற்றும் ரவையை ஒன்றாக வறுத்து மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
கடலை மாவையும் பச்சை வாசனை போகும் வரை வறுத்து வைக்கவும்.
வறுத்து பொடித்த ரவை, ஓட்ஸ் மற்றும் கடலை மாவை ஒன்றாக போட்டு உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு மோர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
அதில் பொடித்த மிளகு, சீரகம், முந்திரிபருப்பு மூன்றையும் போடவும்.
அதன் பின்னர் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கேரட், முட்டைகோஸ், குடைமிளகாய், தேங்காய்துருவல் எல்லாவற்றையும் மாவுடன் சேர்த்து கலக்கவும்.
ஊத்தாப்பம் மாவு பதத்திற்கு கலந்த பிறகு தோசை கல்லை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி லேசாக தேய்க்கவும்.
மேலே எண்ணெய் ஊற்றி ஊத்தாப்பம் இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
சுவையான ஆரோக்கியமான ஓட்ஸ் வெஜ் ஊத்தாப்பம் ரெடி. இதனை தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல சத்தான ரெசிப்பி கொடுத்திருக்கீங்க. நீங்க செய்திருப்பதை பார்க்கும் போதே நல்லசுவையாக இருக்கும் என்பதில் எள்ள அளவும் ஐயமில்லை. கண்டிப்பாக இந்த வாரம் செய்து பார்க்கிறேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

இப்போதுதான் பின்னூட்டம் பார்த்தேன்...வீட்டில் இருக்கும் குட்டீஸுக்கு புதுசா...சத்துள்ளதா என்ன கொடுக்கலாம்னு யோசிச்சப்போ தோணின ரெசிபிதான்..இது.
ட்ரை பண்ணி பாருங்க....உங்க வீட்டிலயும் எல்லாருக்கும் பிடிக்கும்...அதுக்கப்புறம் மறக்காம எனக்கு சொல்லுங்க..
இதுல தேங்காய் சட்னி வச்சுருக்கேன்..நீங்க உங்க சுவைக்கு பிடிச்சமாதிரி வெங்காயசட்னி,குருமா,சாம்பார்ன்னு எது வேணுமின்னாலும் தொட்டுக்கலாம்
தனிஷா....உங்க பின்னூட்டத்திற்கு நன்றி....
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

என்ன அருமையான ரெசிப்பி.சூப்பர்,பாக்கட் பாக்கட்டா ஓட்ஸ் வைத்துக்கொண்டு கஞ்சி தவிர ஏதாவது செய்ய யோசித்தேன்,சமயத்தில் அருமையான குறிப்பு தந்து அசத்திய இளவரசி பாராட்டுக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

உங்களைபோல் சமையல் experts கிட்ட பாராட்டு வாங்குவது உண்மையிலேயே...சந்தோஷம்தான் எனக்கு....நன்றிப்பா...பிள்ளைகள் நலமா ?
அனவருக்கும் என் விசாரிப்பை கூறவும்...நாங்கள்
இந்தியாவில் இருக்கும்போது நாச்சியாவோடு கண்டிப்பாக வீட்டிற்கு வரவும்.....ஆகஸ்டு,செப்டம்பரில் இந்தியாவில் தான் இருப்போம்

நன்றி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி... என்னிடம் ஓட்ஸ் மாவு(Organic Oats flour) தான் இருக்கு. அதை பயன் படுத்தலாமா? நான் பொதுவாக சப்பாத்தி மாவில்(3:1) கலந்து செய்வேன், சற்று கசப்பு தன்மை இருப்பது போல் இருக்கும் எனக்கு. இதில் இவ்வளவு சேர்ர்க்கிறீர்களே... அப்படி இருக்காதா? இல்லை நான் பயன் படுத்து மாவு தான் அப்படி இருக்கா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் Quaker white oats use பண்ணிதான் இத செஞ்சேன்...கொஞ்சம் கூட கசப்பு இருக்காது.நீங்க சொல்ற organic oats flour இதுவரை நான் use பண்ணினதில்ல....அதனால டேஸ்ட்
எப்படியிருக்கும்னு உறுதியா சொல்ல முடியலை..
நீங்க வேணுமின்னா உங்க கிட்ட இருக்க organic oats flour யை உசெ பண்ணனுமின்னு நினைச்சாஜஸ்ட் ஒரு small qty(1tabsp oatsflour ,1tsp ravai,1tsp kadalimaavumeasurementkku roast பண்ணிட்டு)endha muraiyila try
பண்ணி பாருங்க...
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

i am also in qatar. pls contact me. i am waiting for ur mail.

mail me malsri@yahoo.com

added ur id in yahoo msger

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நன்றி இளவரசி... நான் நீங்க சொன்ன மாதிரி முயர்சிக்கிறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப அருசுவை ஓப்பன் ஆகல இன்று தான் பட்டுன்னு ஓப்பன் ஆச்சு உடனே கண்ணில் தென்பட்டது ஓட்ஸ் ஊத்தாப்பம் சூப்பர் குறிப்பு வாழ்த்துக்கள். இப்போ புது புது குறிப்பா கொடுத்து கலக்கி கொண்டிருக்கும் இளவரசிக்கு வாழ்த்துகள்.
ஓட்ஸ் வைத்து கஞ்சி தான் காய்ச்சனுமா என்ன ஆசியா.
ஒட்ஸ் அடை , ஓட்ஸ் ரொட்டி, ஓட்ஸ் நோன்பு கஞ்சி,ஒட்ஸ் ஹல்வா, ஓட்ஸ் பாயாசம், அடுத்து கட்லெட்டுக்கு கிரெம்ஸுக்கு பதிலா ஓட்ஸை ஒன்றும் பாதியுமா திரித்து தோய்த்து சுட்டு பாருங்கள், சூப்பர் கிரிஸ்பியா வரும் கட்லெட்

டைப் ப‌ண்ணிட்டு மெசேஜ் அனுப்புவ‌த‌ற்குள் எர‌ராகிவிட்ட‌து.)

- ஜலிலா

ரேணுகா இப்ப அனுப்பிய மெசேஜை அபப்டியே அருசுவையில் ஓட்ஸ் ஊத்தாப்பம் கீழ் போட்டு விடுங்கள்

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

உங்களைப்போன்றவர்களிடமிருந்து..
பாராட்டு வாங்குவது..குஷியான விசயம்தான்
நன்றி...உங்கள் பின்னூட்டத்திற்கு

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி மேடம் தங்களின் ஓட்ஸ் ரெசிப்பி மிக அருமை. எங்கள் வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடர்கள். இந்த அருமையான குறிப்பை தந்ததற்க்கு நன்றி.

செய்துவிட்டு,அதை விரும்பி எல்லாரும்
சாப்பிட்டார்கள் என்று முதன்முறையாக நீங்கள்தான் சொல்லியிருக்கிறீர்களென்பதால் மிக்க மகிழ்ச்சி..
உங்களின் பின்னூட்டத்திற்கு என் மனமார்ந்த நன்றி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய்

மிகவும் நன்றாக இருந்தது
சத்தான உணவு என்னவருக்கு மிகவும் பிடித்து இருந்தது

உங்கள் பின்னூட்டத்திற்கு என் நன்றி.
உங்கள் கணவருக்கு பிடித்ததா?மகிழ்ச்சி
என்றும் அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அன்பு இளவரசி அக்கா,

உங்களை பராட்ட வார்தைகள் இல்லை.. உங்களின்
குறிப்பு செய்தேன் அவ்வளவு அருமை.. super taste..
என் மகளுக்கும் என் கணவருக்கும் மிகவும் பிடித்துவிட்டது... எளிமையான குறிப்பிற்க்கு மிகவும் நன்றி...

இன்று தங்களுடைய ஓட்ஸ் வெஜ் ஊத்தாப்பம் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நன்றி.

Vaazhga Valamudan!

Vaazhga Valamudan!

இன்று தங்களுடைய ஓட்ஸ் வெஜ் ஊத்தாப்பம் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. கடலை மாவிற்கு பதில் கோதுமை மாவு சேர்த்து செய்தேன். நன்றி.

Vaazhga Valamudan!

Vaazhga Valamudan!

its very super & useful for me thank u illavarasi madam

அடை அருமையாக இருந்தது. என் கணவர்கு மிகவும் பிடிதிருந்தது.மிக்க நன்றி.

ராஜி மகெஷ்

ராஜி மகேஷ்
Live & Let Live

இளவரசி மேடம் எப்படியிருக்கீங்க? குழந்தைகள் நலமா??? உங்க ஓட்ஸ் ஊத்தப்பம் செய்து பார்த்துட்டேனே!!! ஓட்ஸ் இதுக்காகவே வாங்கினேன். உங்க ரெஸிப்பி கோதுமை பிரியாணிக்காக அதை வாங்கின மாதிரி இதை இப்போ தான் வாங்கி செய்தும் சாப்பிட்டாச்சு மிகவும் அருமை சூப்பராயிருந்தது.

நான் யாருன்னு சரியா சொன்னீங்க பாருங்க........அங்க நிக்கிறீங்க ஹெட் ஆஃப் த டிபார்ட்மெண்ட்...... நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் சந்திப்பதில் ரொம்ப சந்தோஷம்.

மீண்டும் சந்திப்போம்
pops.

செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பிய

பாப்பு,
ராதிகா,
ஷர்மிளா,
ஜெமினி,
உமா(பாப்ஸ்) அனைவருக்கும் நன்றி..!!

ஓ உமா நான் சரியாத்தான் உங்கள கண்டுபிச்சுருக்கனா..!!அதுக்கப்புறம் உங்க பதிவ பார்க்கல ...அந்த இழையும் கண்ணில் படலை..சரி தப்பா கெஸ் பண்ணிட்டேன்னு நினைச்சேன்..

ரோஹித்தும் கணவரும் நலமா?வேலை சுவாரசியமாயிருக்கிறதா?

என்றும் அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய் இளவரசி,
ஆஹா ஆஹா அருமையான தோசை, நானும் என்னுடைய room mate ருசித்து சாப்பிட்டோம். ரொம்ப நன்றி, தினமும் என்ன சமையல் செய்வது என்று யோசிப்பதே பெரிய வேலை. இன்றைய சமையல் உங்களால் முடிந்தது.

இதை இட்லியாகவும் செய்யலாமா என்றும் சொல்லுங்கள்

அன்புடன்
பவித்ரா

சாரிங்க உங்க பதிவ இப்பதான் பார்க்கிறேன்..

நன்றி....நல்லா இருந்ததா..மகிழ்ச்சி...

நான் இட்லி இதுவரை செய்யலை..

ஆனால் இட்லியென்றாலும் சுவை நன்றாகத்தான் இருக்கும்..மாவுபதம் மட்டும் கெட்டியாக வைத்து முயற்சி செய்யலாம்.உங்க பின்னூட்டத்திற்கு நன்றி
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

சாரி எல்லாம் வேண்டாம்ப்பா! இட்லி நானும் ட்ரை பண்ணி பார்க்கிறேன். நிஜமாவே ஓட்ஸ் தோசை சூப்பர்.வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவித்ரா