சோயா புலவு

தேதி: June 16, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

சோயா உருண்டைகள்- 1 கப்
பிரியாணி அரிசி- 2 1/2 கப்
பெரிய வெங்காயம்-3
கீறிய பச்சை மிலகாய்-4
மிளகாய்த்தூள்-அரை ஸ்பூன்
இஞ்சி விழுது- 1 ஸ்பூன்
சிறிய பூண்டு பற்கள்-15
தேவையான உப்பு
எண்ணெய்-2 மேசைக்கரண்டி
நெய்- 3 மேசைக்கரண்டி
கொத்தமல்லி-அரை கப்
புதினா இலைகள்- அரை கப்
மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி
தேங்காய்த்துருவல்- அரை கப்
முந்திரிப்பருப்பு-8
சோம்பு- 1 ஸ்பூன்
கிராம்பு-1
ஏலம்-1
பட்டை- 1 துண்டு


 

அரிசியைக் கழுவி போதுமான நீரில் ஊறவைக்கவும்.
சோயா உருண்டைகளை 4 கப் வென்னீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, பிறகு தண்ணீரை வடித்து குளிர்ந்த நீரிலும் 10 நிமிடங்கள் போட்டு வைத்து, சோயா உருண்டைகளிலுள்ள தண்ணீரைப் பிழிந்து எடுக்கவும்.
தேங்காயை முந்திரிப்பருப்பு சேர்த்து மையாக அரைக்கவும்.
கிராம்பு, ஏலம், பட்டை, சோம்பைப் பொடிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணையையும் நெய்யையும் ஊற்றி சூடாக்கவும்.
வெங்காயைத்தை மெல்லியதாக அரிந்து சேர்த்து வதக்கவும்.
கீறிய பச்சை மிளகாய், இஞ்சி விழுது, பூண்டு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
புதினா இலைகள்,பொடித்த மசாலா, மிளகாய்த்தூள், கொத்தமல்லி சேர்த்து சில வினாடிகள் வதக்கவும்.
அரைத்த தேங்காய்க்கலவையைச் சேர்த்து, சோயா உருண்டைகள், உப்பு சேர்த்து மெல்லிய தீயில் வதக்கவும். வெந்ததும் அதைத் தனியே எடுத்து வைக்கவும்..
அதே பாத்திரத்தில் 7 கப் நீரை ஊற்றி கொதி வந்ததும் அரிசியைப் போட்டு மிதமான தீயில் சமைக்கவும்.
அரிசி முக்கால் பதம் வெந்ததும் உப்பைச் சேர்க்கவும்.
தண்ணிர் முழுவதுமாகச் சுண்டியதும் சோயா மசாலாவை மேலே பரப்பி சாதத்தை ‘தம்’மில் வைக்கவும்.
சுவையான சோயா பிரியாணி தயார்!!!


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் இன்று சோயா புலாவ் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி

மனோ அக்கா-- சோயாபுலவு...
சனிக்கிழமை செய்தேன், சொல்ல வார்த்தையில்லை. என்ன ஒரு சுவை. எனக்கு விதம் விதமான சாதங்கள் செய்வதென்றால் மிகவும் பிடிக்கும். இது ஈசியான முறையாகவும் இருந்தது. பொருட்களும் இருந்தமையால் செய்தேன். மிக அருமையான புலவு. படம் வரும் பாருங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சோயா புலவு செய்து பின்னூட்டமும் கொடுத்ததற்கு மிக்க நன்றி!! உங்களின் மனந்திறந்த பாராட்டும் ரசித்து செய்து ருசித்ததை எழுதியிருந்த விதமும் என்னை மிகவும் மகிழ்ச்சி அடைய வைத்தது.

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த சோயா புலவின் படம்

<img src="files/pictures/aa304.jpg" alt="picture" />

'சோயா புலவு' மிக அழகாக இருக்கிறது புகைப்படத்தில்!!