பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு!!!

ஹாய் பிரண்ட்ஸ் வெகு நாட்களுக்கு பின் உங்களுடன் பேச வந்துள்ளேன்!!

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு டிபன் கொடுத்தனுப தினம் ஒரு ரெஸிபி செய்ய மண்டையை போட்டு உடைக்க வேண்டி இருக்கு எனக்கு மட்டும் இப்படியா இல்லை அனைவரும்மா என தெரியவில்லை தளியோட திரடில் டிபன் எல்லாமே மிக்ஸிங்கில் இருக்கு அதனால் டிபனுக்காவே தனியாக தொடங்கி இருக்கேன்...அருசுவை மூலம் பலர் நிறைய ரெஸிபி டிரைசெய்து இருப்பீங்க..அப்படி டிரை செய்து குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரெஸியை இங்கே குறிப்பிட்டால் எனக்கும் என்னை போல முழிக்கும் தாய்மார்களுக்கும் உதவியாக இருக்கும் அதோட ஓனாக தெரிஞ்ச டிபனையும் சொல்லுங்கள் பிளீஸ்

நட்புடன்,

மர்ழியா..

டியர் eric நலமா?அருசுவைக்கு புதிதா?வருக! என் சிக்கன் கிரேவி நெய் சோறு இரண்டையும் செய்து பார்த்தீங்களா ரொம்ப சந்தோசமா இருக்கு தேங்ஸ்மா...இப்ப கூட சிக்கன் வித் கத்ரிக்காய்மாங்காய் செய்து இருக்கேன்..கணவருக்காக வெயிட்டிங்...யாரும் சமைக்கலாம் போய் கத்ரிக்காய்மாங்காய் செய்து பாருங்கள் என் சிக்கன்கிரேவியுடன் சாப்பிட சுவை அபாரமாக இருக்கும்..வெரும் சாதம்னா கூட ரசம் வைத்துகங்க

நெய்சோறுடன்னா சொல்ல தேவையில்லை

அட பிரபா பொண்ணே:) எப்படி இருக்கீங்க?என்னை மறக்காமல் நியாபகம் வைத்து இருக்கீங்களே சந்தோசம் பிரபா..

நான் நலமே தளி இந்தியா வந்து இருக்கா விரைவில் பதில்கொடுப்பா

அன்புடன்,
mrs.noohu

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மர்லியா நான் அருசுவைக்கு புதுசுதான் நீங்க எல்லாரும் ஜாலியா பேசிகிறீங்க என்னையும் உங்க தோழியா ஏத்துங்க எனக்கு 3 1/2 வ்ய்து குழ்ந்தை இருக்கு அவ படிக்கிறாள் காலையில் அவ்ங்க்ளுக்கு சாப்பாடு கொடுக்குறதுக்குள்ள் என் Bp ஏறிடும் நான் காலையில் கார்ன் பேளேக்ஸ் , முட்டையில் டோஸ்ட் செய்த பிரெட், ஒட்ஸ், 2 முட்டை பொரித்து அதோட் காம்ப்ளான் கொடுப்பேன் எனக்கும் என்ன்லாம் சாப்பாடு கொடுக்குறதுன்னு ரொம்ப மண்டைய போட்டு குழ்ப்பிக்குவேன் என்க்கும் இந்த மாதிரி குழ்ந்தைக்கு கொடுக்க் breakfast , lunch ஆரோக்கியமான் உண்வு வ்கைக்கள் கொடுங்க அனுபவசாலி தாய்மார்க்ளே

ஹாய் மர்லியா நான் அருசுவைக்கு புதுசுதான் நீங்க எல்லாரும் ஜாலியா பேசிகிறீங்க என்னையும் உங்க தோழியா ஏத்துங்க எனக்கு 3 1/2 வ்ய்து குழ்ந்தை இருக்கு அவ படிக்கிறாள் காலையில் அவ்ங்க்ளுக்கு சாப்பாடு கொடுக்குறதுக்குள்ள் என் bp ஏறிடும் நான் காலையில் கார்ன் பேளேக்ஸ் , முட்டையில் டோஸ்ட் செய்த பிரெட், ஒட்ஸ், 2 முட்டை பொரித்து அதோட் காம்ப்ளான் கொடுப்பேன் எனக்கும் என்ன்லாம் சாப்பாடு கொடுக்குறதுன்னு ரொம்ப மண்டைய போட்டு குழ்ப்பிக்குவேன் என்க்கும் இந்த மாதிரி குழ்ந்தைக்கு கொடுக்க் ஆரோக்கியமான் உண்வு வ்கைக்கள் கொடுங்க அனுபவசாலி தாய்மார்க்ளே

anbe sivam
அன்பு மர்ழியா..

குழந்தைகள் நலமா.....?

பொதுவாக குழந்தைகள் கலர்ஃபுல்லாகவும் புதுசு புதுசாகவும் செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள்.
அவர்களிடமே ஒரு சின்ன லிஸ்ட் சொல்லி.. இதில் என் கண்ணம்மாவுக்கு அம்மா என்ன இன்றைக்கு லஞ்ச்க்கு செய்யட்டும்..?என்று கேட்டு கேட்டு செய்து கொடுங்கள். இது சாப்பிடுவதற்கான ஆர்வத்தை தூண்டும்.

லஞ்ச் பேகில் வைத்துவிட்டு குட் girls (or boys) எல்லாம் மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்களாம் என்று சொல்லுங்கள். நாம் இப்படி எல்லாம் கொஞ்சிப் பேசி தாஜா பண்ணித்தாங்க சாப்பிட வைக்கணும்.
கவிதாசிவக்குமார்

anbe sivam

anbe sivam
ப்ரெட் வெஜ் அடை
-----------------------

தேவையான் பொருட்கள்:

ப்ரெட் - 2 ஸ்லைஸ்
பெரிய வெங்காயம்-பாதி அளவு
கேரட்- 1 (துருவியது)
கோஸ் - சிறிதளவு (துருவியது)
குடைமிளகாய்- சிறிதளவு(பொடியாக நறுக்கியது)
முளை கட்டிய பச்சைபயிறு-2 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
இஞ்சி பூண்டு - சிறிது
கரம்மசாலா -1/2 டீஸ்பூன்
ஆட்டாமாவு அல்லது கடலைமாவு - 1 மேஜைக்கரண்டி

செய்முறை:

1.வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
2.வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
3.கரம்மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்
4.பிறகு துருவிய காய்களை சேர்த்து வேகும் வரை வதக்கவும்.உப்பு சேர்க்கவும்.
5.கடைசியாக முளை கட்டிய பயிறை சேர்த்து பிரட்டவும்.கொத்தமல்லி சேர்த்து பிரட்டி
இறக்கி வைக்கவும்.
6.ப்ரெடை நீரில் நனைத்து பிழிந்து உதிர்த்து கொள்ளவும்.
7.வதக்கி வைத்துள்ள காய்களையும், மாவையும் ப்ரெட்டுடன் சேர்த்து தளர பிசையவும்.
8.தவாவை சூடாக்கி வெண்ணை அல்லது நெய் தடவி மெல்லிய அடையாக தட்டவும்.
ஓரங்களில் சிறிது நெய் விடவும்.
9.இரு புறமும் வேகவிட்டு எடுக்கவும்
10. வெறுமனேவோ சாஸ் உடனோ சாப்பிடலாம்.

kavithasivakumar

anbe sivam

மர்ழியா அவர்களுக்கும்,இங்கு இருக்கும் அருசுவை தோழிகளுக்கும் ஹாய்..ஹாய்...ஹாய்...
மர்ழியா..நலமாக இருக்கின்றீர்களா..?குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது சாதாரண விஷயமா..என்ன?கவிதா அவர்கள் சொல்றா மாதிரி என்னன்ன தாஜா செய்ய வேண்டியிருக்கு.என் பைய்யனுக்கு கே.ஜீ.1_ல் இப்படித்தான் கொஞ்சம் அவஸ்தை பட்டேன்.எதை வைத்தால் விரும்பி சாப்பிடுகிறான்.எதை வைத்தால் திரும்ப எடுத்து வருகின்றான்..என்றெல்லாம் பார்க்க வேண்டியதாயிற்று.
இரண்டு பிரட்டை தனி,தனியே டோஸ்ட் செய்து அதில் சாக்லேட்,நட்ஸின் மிக்ஸ்ட்டான் nutellaa என்பதை இரு ப்ரட்டிலும் தடவி ஒன்றாய் மூடி கொடுத்து பார்த்தேன்.அதை விரும்பி சாப்பிட்டான்.(இன்றுவரை அது அவன் ஃபேவரட்)இன்று எல்லாமே சாப்பிடுகிறான்.
அடுத்து என் பெண்ணுக்கு தான் மிகவும் கஷ்ட்டப்பட்டேன்.
இந்த ப்ரெட் டோஸ்ட் மிகவும் பிடிக்கும்.இட்லியை முக்கால் வாசி இரண்டாக கட் (முழுவதுமாக பிரிக்காமல்..)செய்து அவர்களுக்கு பிடித்தமான ஜாம் தடவி மூடி வைத்து கொடுத்து அனுப்பியது அவளுக்கு விருப்பமான ஒன்றாக இருந்தது.இப்போது அவளும் கொடுத்தனுப்பும் எல்லாவற்ரையும் சாப்பிட்டு வருகின்றாள்.அடுத்து என் கடைக்குட்டி பையன் ரெடியாக இருக்கின்றான்.இவர்கள் சாப்பிடும் எல்லாம் அவன் சாப்பிடுவதால் எனக்கு டென்ஷன் கம்மியாக இருக்கும் என நினக்கிறேன்.சாதாரணமாக நான் முயற்ச்சி செய்து பார்த்ததை இங்கு சொல்கிறேன்.அது உங்களுக்கு தேவை படுகின்றதா என பாருங்கள்.
அப்புறம் மேகி எல்லா குழந்தைகளுக்கும் பிடித்தமான ஒன்றே என நினைக்கிறேன்.வெஜிடபுளுடன் சாப்பிட பழக்குவது நன்று.சரி கொஞ்சம் பழக வேண்டும் என்றால்...பிளைனாக மேகி மசாலாவை சிறிதே தூவி கொஞ்சம் தண்ணீர் விட்டு பட்டர் போட்டு சமைத்து கொடுக்கலாம்.
கொஞ்சம்,கொஞ்சமாக தான் அவர்களை நம் வழிக்கு கொண்டு வர முடியும்.வாழை பழம், ஆப்பிள்,மாதுளை.அப்புறம் கேரட்,வெள்ளரி காய் இவற்றில் எதேனும் ஒன்றை தினம் சிறிது,சிறுதாக கட் செய்து கொஞ்சம் கொடுத்து அனுப்பினால் சாப்பாடு சாப்பிட வில்லை என்றாலும்,பழத்தை சாப்பிட்டார்களே என்ற திருப்தியாவது இருக்கும்.உடம்புக்கும் நல்லதல்லவா...
முட்டை சேர்ப்பது என்பது நல்லது என்பதால்,முட்டை சீனி,சில துளி பால்,சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து அதில் பிரட்டை நனைத்து தவாவில் நெய் ஊற்றி இதை இரு பக்கமும் டோஸ்ட் செய்து எடுத்து சிறு,சிறு பீஸாக கட் செய்து கிடுத்து அனுப்பலாம்.
சரி மர்ழியா..திரும்ப வருகின்றேன்.சில வேலைகள் என்னை அழைக்கின்றது சரியா...
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹலோ மர்ழி, கவிதா, அப்சரா...

எல்லோரும் எப்படி இருக்கிங்க? மர்ழி , ரொம்ப நாளாச்சு உங்களோட பேசி. பொண்ணு, பையன் எல்லாம் நலமா?! பசங்க உங்களை ரொம்ப பிஸியா வைச்சிருக்காங்கப்போல இருக்கு.

கவிதா, அப்சரா,
உங்களோட இப்பதான் முதல்முறை பேசறேன்னு நினைக்கிறேன். நலமா?!

இந்த டாபிக் இன்னைகுதான் கண்ணிலே பட்டது. ஸ்கூல் போகும் வயது குழந்தைகள் உள்ள எல்லா தாய்மார்களுக்கும், ரொம்ப உபயோகமான தகவல்.
எனக்கும் தினமும் இரண்டு குழந்தைகளுக்கு லன்ச் பேக் பண்ணும் வேலை. போன வருஷம்வரை பொண்ணுக்கு மட்டும், கொஞ்சம் ஈஸியா இருந்தது. (ஆனால் அவளும் ஒரு கஷ்டமான ஸ்டேஜை தாண்டிதான் இப்ப ப‌ரவாயில்லை நிலைமைக்கு வந்து இருக்காள்.) இப்ப என் பையனுக்கும் பிடித்தமாதிரி என்ன கொடுப்பது என்பதுதான் எனக்கு தினமும் தலைவெடிக்கிற வேலையா இருக்கு. அவளுக்கு பிடிச்சா அவனுக்கு பிடிக்காது, இல்லை அப்ப‌டியே தலைகீழ...
என்னதான் அவனுக்கு பிடிச்சதா பார்த்து பார்த்து கொடுத்தாலுமே, அதையும் சாப்பிடாம என் பையன் மீதி கொண்டு வரும்போதுதான் இன்னும் கஷ்டமா இருக்கு. :(

நான் யூஸுவலா கொடுப்பது (இப்போதைக்கு என் பசங்க அப்ரூவ் பண்ணியிருப்பது.. : ))
1. இட்லி ‍ கட் பண்ணி சர்க்கரை + நெய் விட்டு பிரட்டி கொடுப்பேன்.
2. சின்ன சின்ன தோசை (பைட் சைஸ்) வித் இட்லி பொடி + நல்லெண்ணெய் ஒவ்வொரு தோசையின் மீதும் தடவி)
3. மேக்க‌ரோனி அன்ட் சீஸ் (இப்போதைக்கு இதுதான் என் பையனின் பர்ஸ்ட் சாய்ஸ்) ஆனா, இதில காய் போட்டுட்டா போச்சு, அப்ப‌டியே வீட்டுக்கு வந்துடும்!
4. பிரெட் சான்ட்விச் வித் சீஸ் ‍‍ இதில லெட்டுயூஸ், காய் எல்லாம் வைச்சிட்டா சாப்பிட மாட்டாங்க! :(
அதனால் ஒரே ஒரு வேரியேஷன் ‍ ஒரு நாள் அப்படியே சீஸ் வைப்பேன், அடுத்தமுறை சீஸ் மெல்ட் (கிரில்ட் சீஸ் சான்ட்விச்) பண்ணி வைப்பேன்.
5. சிக்கன் நங்கெட்ஸ் + கெட்ச்சப் சாஸ் (இது பையனுக்கு இஷ்டம், பொண்ணுக்கு அவ்வளவா பிடிக்கலை).
6. இப்ப புதுசா சேர்ந்த ஒரு ஐய்ட்டம் ‍ சப்பாத்தி வித் ஜாம்! எப்பவுமே சப்பாத்தி பிடிக்கும், ஆனால் எப்படி கொடுத்து அனுப்பினால் சாப்பிட வைக்க முடியும் என்று தெரியாமல் இருந்தேன், ஏனென்றால், சைட் தொட்டுக்க‌ காய் வைத்து சாப்பிடும் பழக்கமே இல்லை இருவருக்கும், வீட்டிலும் கட்டாயப்படுத்திதான் குருமா போன்றவை தொட்டுக்கொள்ள வைப்பேன். அப்பதான் இன்னொரு பிரண்ட் சொன்னாங்க, ஜாம் வைத்து கொடுத்துப்பாருங்கள் என்று. அப்பாடி, இது வொர்க் அவுட் ஆகி இருக்கு! : )
7. சாதம் ‍- முன்னாடி எலுமிச்சை சாதம், இல்லைன்னா தேங்காய்பால் புலாவ் செய்தால் எடுத்து போவாள் (பொண்ணு மட்டும்). இப்ப ஒரு 6,7 மாசமா, நோ ரைஸ் என்று ஒரேடியா ஸ்ட்ரைக்!
சோ, தினம் தினம் என்ன பண்ணுவது என்று நான் திகைக்க வேண்டியதுதான்!

போன வாரம் அப்ப‌டிதான், எப்படியாவது காய் சாப்பிட வைக்கவேண்டுமே என்று, கேரட், பீன்ஸ், உருளை காய் கறிகளை எல்லாம் பொடியா நறுக்கி, வதக்கி, அதை ரெடிமேட் மாவில் சமோசா ஷெப்பில் வைத்து மடித்து, பேக் பண்ணி, அதை இரண்டிரண்டாக வெட்டி டப்பாவில் வைத்து கொடுத்தனுப்பினேன். சமத்தா சாப்பிட்டுட்டு வந்தாங்க இரண்டு பேரும்! நீங்களும் ட்ரை பண்ணி பார்க்கலாம். ஒரு முறை ஜலிலாக்கா இதுப்போலவே காய்கறி ப்ரை பண்ணி, ப்ரெட்டில் வைத்து சீஸ் தூவி டோஸ்டரில் வைத்து செய்து கொடுக்க ஒரு குறிப்பு எழுதியிருந்தாங்க. அதுகூட நல்லா சக்ஸசா இருந்தது.
இங்க தோழிங்க கொடுத்து இருக்கும் சில புது ஐய்ட்ட‌ங்க‌ள் செய்து ட்ரை ப‌ண்ணி பார்க்கலாம் என்றும் இருக்கேன்.
ஓக்கே, அப்படி, இப்படின்னு ரொம்ப‌ பெரிய‌ ப‌திவா போச்சு! : ) மீண்டும் பிற‌கு பேச‌லாம். ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் பர்வீன் அருசுவை பக்கமே வரமுடிவது இல்லை இப்பதான் உங்க பதிவை படிச்சேன் தாமதமான பதிவிற்கு மன்னிச்சுகங்க :)கண்டிப்பாக ஏற்றுகரேன் பழைய இழையை பார்த்தீகளா நான் அப்பாவின்னு தெரிஞ்சு இருக்குமே :) ஆமாம் ஆரம்ப ஸ்டேஜில் இப்படிதான் இப்ப எனக்கு பழகிட்டு :)

ஹாய் கவிதா நலமா?ஆமாம் உங்க ஐடியாவும் நல்லா இருக்கு டிரை செய்கிறேன் :)
உங்க அளவு குறிப்புக்கும் நன்றிமா

ஹாய் அஃப்சரா நலமா?அழகான பெயர்..உங்க பதிவிற்க்கும் தேங்ஸ்மா
அந்த சில வேளை இன்னுமா முடியவில்லை இதோ வாரேன்னு சொல்லிட்டு போனீங்க இன்னும் கஆணலயே அதான் கேட்டேன் :D

சுஸ்ரீ எப்படி இருக்கீங்க உங்க பொண்ணு நலமா?அனைவரையும் அடிக்கடி நினைப்பது உண்டு....பையனுக்கு 1 வயது ஆக போகிறது எப்படா ஸ்கூல் போகபோறான்னு இருக்கு :)

பெரிய பதிவானாலும் நிறைய பேருக்கு உதவும் முக்கியமான பதிவாயிற்றே!

அன்புடன்,
mrs.noohu

அன்புடன்,
மர்ழியா நூஹு

haiஹை எப்படி இருக்கிங்க.நான் இப்பதான் உஙகளேட பதிவு பார்த்தேன்.ரெம்ப மகிழ்ச்சியாக இருந்தது.கண்டிப்பாக உங்களேட மாங்காகத்திரிகா ரெசிப்பிம் செய்துபார்க்கிறேன்.

சமீபத்திய பதிவில் வருவதற்காக இந்த பதிவு.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

மேலும் சில பதிவுகள்