கிரில்டு மீன் (முழு மீன்)

தேதி: June 16, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் தனது குறிப்புகளை பகிர்ந்துக் கொண்டுள்ள <b> வனிதா வில்வாரணிமுருகன் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ள குறிப்பு இது.

 

முழு மீன் - அரைக் கிலோ
மிளகு - ருசிக்கு
உப்பு - ருசிக்கு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி


 

மீனை சுத்தம் செய்து மேலே கத்தியால் ஆழமான வெட்டுகள் போட்டு வைக்கவும். தேவையான மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
மிளகை பொடித்து வைத்துக் கொள்ளவும். மஞ்சள் தூள், உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து வைக்கவும்.
மீனின் மேலும், அதன் உள்பகுதியிலும் இந்த கலவையை நன்றாக தடவி 4 மணி நேரம் அல்லது குறைந்தது 2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
மைக்ரோவேவில் வைத்து க்ரில் மோடில் 3 நிமிடம் வைக்கவும். பின்னர் மைக்ரோவேவ் ஹை மோடில் 2 நிமிடம் வைக்கவும்.
மீனை திருப்பி விட்டு மீண்டும் இதே போல் வைத்து எடுக்கவும். (நேரம் உங்கள் மைக்ரோவேவிற்கும், மீனின் அளவிற்கு தகுந்தபடியும் மாற்றவும்)
சுவையான ஆரோக்கியமான, துளியும் எண்ணெய் சேர்க்காத மீன் தயார். மைக்ரோவேவ் இல்லாதவர்கள் ஒவன் அல்லது தோசை கல்லில் எண்ணெய் விட்டும் சமைத்து எடுக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்புள்ள அட்மின் நண்பர்களுக்கு... குறிப்பை வெளியிட்டமைக்கும், பெயர் திருத்தம் செய்தமைக்கும் மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

oil சேர்க்காம...பண்ண முடியுங்கறதாலதான் நான் முடிந்தவரை microwave அதிகம் use பண்ணுவேன்
நீங்களும் அதுமாதிரி ஓவன் ஃப்ரை ட்ரை பண்ணி காட்டியுள்ளது ஆரோக்கியமான மகிழ்ச்சியான விசயம்
நன்றாக எளிதாக செய்து காட்டியுள்ளீர்கள்.
நான் நான் வெஜ் வீட்டில பண்றதில்ல...otherwise i will try ur receipe...

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி இளவரசி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் அறுசுவைக்கு புதுசா..அதனால எங்க என்ன த்ரட்...யாரு எத பத்தி சொல்லறாங்கன்னு பொறுமையா பார்க்க நேரம் இருக்காது...கிடைக்கற
கொஞ்ச நேரத்தில..குறிப்புகள் மட்டும்தான் போட முடியும்...திடீர்ன்னு சிரியா3 ஒபென் பண்ணினா சரி முன்னாடி பகுதிகள் படிச்சுட்டு வரலாம்னு பகுதி-1 பார்த்தா ஆரம்பமே அம்ர்க்களமா இருக்கு..
சிரித்து,மிகவும் ரசித்து படிக்க ஆரம்பிக்கிறேன்
இதை எப்போது முழுதாக படித்து முடிப்பேன் என தெரியவில்லை...அதற்கு முன் உங்களை பாராட்டலாம்..இங்கே பதிவு போட்டால் உடனே பார்ப்பீர்கள் என்றுதான் இங்கு போட்டேன்...

"ரசிப்பதற்கு ஒரு மனம் வேண்டும்...அப்படி ரசித்ததை மற்றவர் ரசிக்கும்படி சொல்வது..ஒரு கலை....கலையரசியே.....வாழ்க உங்கள் திறமை
அதோடு நகைச்சுவை கலந்து அடிக்கும்போது வாய் விட்டு,மனம் விட்டு சிரிக்க முடிகிறது...
ரோடை கழுவி விடுவது பற்றி எழுதியது படிக்கும்போது உங்கள் மக்கா வார்த்தை பார்த்து நீங்க நாகர்கோவில் பக்கம் என்று தோணுகிறது..
என் கணிப்பு சரியா?
சரி பிறகு பார்க்கலாம்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஆயில் இல்லாத ரொம்ப ஈஸியான ப்ரையா இருக்கே. வியாழன் அன்று செய்து விட்டு சொல்கிறேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மிக்க நன்றி இளவரசி. முழுசும் படிச்சிட்டு சிரியா பார்க்க வந்துடுங்கோ. நமக்கு நாகர்கோவில் இல்லைங்கோ.... மக்கா'னு சொல்லும் வழக்கம் திருநெல்வேலி, மதுரை பக்கமும் உண்டு. நமக்கு மதுரை நண்பர்கள் அதிகம், திருநெல்வேலி 18 வருடம் வாழ்ந்த ஊர்... அதனால் தான் அந்த வார்த்தை எல்லாம் வருது.

தனிஷா... வாங்க வாங்க, கீரை வாங்கி வந்து சமைச்சீங்களா?? கேக்கனும்'னு நினைச்சுகிட்டே இருந்தேன்.... இரண்டும் செய்துட்டு சொல்லுங்க. மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி சிம்பிளாக ஆனால் ஆரோக்கியமான குறிப்பு,நாங்கள் அபுதாபியில் இருக்கும் போது zahrat alarab restaurant போய் இதே இதே கிரில் ஃபிஷ் சாப்பிடுவோம்.பார்க்க அப்படியே உள்ளது,கொஞ்சம் சாலட் உடன் பரிமாறி இருந்தால் ஃபுல் மீல் தான்.சூப்பர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அதென்ன கிரில் மோட்? எங்க microwave ல இப்படியொரு function இல்லையே.. கூட்டாஞ்சோறில் இருந்து நான் உங்க குறிப்பை செஞ்ச போது ஒரு microwave பாத்திரத்துல வச்சு ஹை ல வச்சு அப்படியே வேக வச்சேன்.. நான் செஞ்சது soft ஆ வெந்து வந்தது.. நீங்க கொடுத்துள்ள படங்கள பாத்தா அப்போ இதை க்ரில்லர் ல வச்சு செய்யனுமா?? இது மாதிரி செஞ்சா நல்லா க்ரிஸ்பியா வருமா?

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஓ... கிரில் மீன்....
வனிதா கிரில் மீன் சூப்பர். நானும் இப்படி பலவிதமான பொருட்களை மாற்றி மாற்றி உள்ளே வைத்துச் செய்திருக்கிறேன். ஆனால் பிரச்சனை என்னவென்றால். வின்ரர் காலத்தில் இங்கே கதவு திறந்துவிடமுடியாதென்பதால் மணம் வீட்டுக்குள் நிற்கும். எனவே சமரில் மட்டுமே செய்யலாம். பார்க்கவே சாப்பிடத் தோன்றுகிறது.

சந்தனா, நீங்கள் சொல்வது மைக்குறோவேவ் மட்டும் உள்ளது. அது அவித்துத்தான் தரும். சில மைக்குறோவேவில் இப்படி இருக்கிறது.
உங்களிடம் அவண், கிரில் இருக்கும்தானே அதில் செய்யலாம். அவணிலும் வைக்கலாம், நீண்ட நேரம் வைத்தால் நல்ல மொறுமொறுப்பாக வரும். இல்லையா வனிதா?.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் வனிதா
நல்ல அரோக்கியமான கிரில்டு மீன் கட்டாயம் செய்யணும்.குறிப்புக்கு நன்றி.இப்போது நான் விதரம் முடிந்ததும் செய்து பாத்திற்று பின்னுட்டம் கொடுக்கிறேன்.ஆவுனில கிரில் பண்ணிறது ஏன்டா எவ்வளவு நேரம் வைக்கோணும்?
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

பதிலுக்கு நன்றி அதிரா... அவன் வேலை செய்யலை.. க்ரில்லர் இனி தான் வாங்கணும்... கொஞ்ச நாளாவும்.. செஞ்சு பாத்துட்டு சொல்லறேன்...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

மிக்க நன்றி ஆசியா. நான் இதை விருந்துகளுக்கும் செய்வது உண்டு. நல்ல பாராட்டை வாங்கி தந்த வகை. நீங்க சொன்ன மாதிரி சாலடுடன் குடுத்தால் சிரிய மக்களுக்கு மிகவும் பிடிக்கும். :)

சந்தனா நீங்க பண்ணது தப்பிலை, க்ரில் பண்ணா வறுத்த் அமாதிரி வரும், வெறு மிக்ரோவேவ் ஹய்'ல் ரொம்ப நேரம் வெச்சா மீன் துண்டு துண்டு வெடிச்சிடும். இல்லன்னா ஒன்னு பண்ணுங்க, மைக்ரோவேவில் 2 நிமிஷம் வைத்து விட்டு எடுத்து தோசை கல்லில் சிறிது எண்ணெய் விட்டு பொரித்து விடுங்கள். உண்மையில் எண்ணெய் விட்டு செய்தால் ருசி சூப்பரா இருக்கும். இல்லை என்றால் அதிரா சொல்வது போல் ஒவனில் லேசாக எண்ணெய் தடவி செய்யுங்க. நேரம் எனக்கு சரியா சொல்ல தெரியல, அது உங்க ஒவன் பொருத்தது, அடிக்கடி திறந்து பாருங்க (1 நிமிஷத்துக்கு ஒரு முறை). செய்துட்டு சொல்லுங்க சந்தனா. மிக்க நன்றி. :)

மிக்க நன்றி அதிரா... வின்டரில் கவலை எதுக்கு... செய்துட்டு மைக்ரோவேவ் உள் ஒரு பாதி அல்லது சின்ன துண்டு எலுமிச்சை வைத்து மைக்ரோவேவ் ஹய்'ல் 1/2 நிமிஷம் அல்லது 1 நிமிஷம் வைத்து அப்படியே 1 மணி நேரம் மூடி வைங்க. திறந்து சுத்தம் பண்ணுங்க, மைக்ரோவேவிலும் வாசம் இருக்காது, வீட்டிலும் இருக்காது. நம்ம வீட்டில் வின்டருனாலும் சரி, சம்மர்னாலும் சரி வாரத்தில் 2 நாளாவது இந்த மீன் இருக்கும். செய்துட்ட் சொல்லுன்கோ அதிரா.... :)

சுகா... எனக்கு மீன் ஒவனில் வைத்து பழக்கம் இல்லை அதனால் சரியா நேரம் சொல்ல தெரியல. நீங்க விரதம் முடிங்கோ அதுக்குள்ள ஒரு நாள் நான் செய்த் பார்த்து சொல்றேன், ஆனாலும் இது உங்க ஒவனை பொருத்து மாறும். எதற்கும் முதல் முறை, நீங்கள் 1 நிமிஷத்துக்கு ஒரு முறை திறந்து பார்த்து செய்தால், பின் நேரம் சரியாக தெரிந்து விடும். மிக்க நன்றி சுகா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதாஉடன் பதிலுக்கு நன்றி.
எனக்காக செய்து பாத்து சொல்வதாக சொன்னதற்கு நன்றி.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

வனி க்ரில் மீன் செய்தேன் வியாழன் அன்று. ரொம்ப டாப். நானும் ஹஸ்சும் போட்டி போட்டு சாப்பிட்டோம். கீரையும் செய்தேன் ரொம்ப நல்லாயிருந்தது செய்த அன்றிலிருந்து அதை ஓபன் பண்ண படாதபாடு படுகிறேன். நல்ல வேளை நீங்களே கேட்டுடீங்க. சூப்பர்ப்பா.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

2 குறிப்புகளும் செய்து பார்த்து சொன்னமைக்கு மிக்க நன்றி தனிஷா... :) ரொம்ப சந்தோஷமா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி.. இப்போ தான் பாத்தேன்.. மிக்க நன்றி பதிலுக்கு.. நீங்க சொன்ன மாதிரி செஞ்சு பாக்கறேன்...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா