கேப்ஸிகம் பச்சடி

தேதி: June 17, 2009

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

கேப்ஸிகம்(குடமிளகாய்) - 1
எண்ணெய் - 1/2 தே.க
வர மிளகாய் - 2
உளுத்தம் பருப்பு- 1/2 தே.க
கடுகு - 1/4 தே.க
புளி - நெல்லிகாய் அளவு
உப்பு - தேவைகேற்ப்ப


 

கேப்ஸிகம்(வேண்டுமானல் சின்ன வெங்காயம் 2
தக்காளி 1) சேர்க்கலாம், எல்லவற்றையும் துண்டுகளாக்கவும்.
ஒரு பானில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து
உளுத்தம் பருப்பு,வற்றல் மிளகாய், கேப்ஸிகம் சேர்த்து நல்ல வதக்கவும்.
வதங்கியபின் மிக்சியில் போட்டு ரவை பதத்தில்
அரைத்தெடுக்கவும்.
இது கலந்த சாததிற்க்கும், சாததிற்க்கும் தொட்டு சாப்பிட நன்றாக
இருக்கும்.


இதை சிகப்பு குடமிளகாய்,மஞ்சள் குடமிளகாய் போன்றவற்றிலும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

விஜி கேப்ஸிகம் பச்சடி நன்றாக இருந்தது. தயிர் சாத்ததிற்கு அருமையான காம்பினேஷன். ஆமாம் விஜி எங்களுக்கு இண்டியன் ஸ்டோர்ஸ் நிறைய இருக்கு. வீட்டு பக்கத்திலேயே படேல் ஸ்டோர்ஸ் ரொம்ப வசதியாக இருக்கு. நீங்களும் அங்கு தான் வருவீர்களா?

நன்றி. ஆமாம் நான் நிறய்ய வாங்குவதாக் இருந்தால் அங்கு வருவேன். மற்றபடி பாம்பே பஜாரில் வாங்குவோம். நிங்க எங்கு இருக்கிங்க. என்னோட ஐடி வின்னிகிட்டே இருக்கு உங்க நம்பர் குடுங்க நாம் மீட் பன்னலாமே.

ஹாய் விஜி நலமாக இருக்கீங்களா? முதல்முறையாக உங்களுடன் தொடர்புகொள்கிறேன். உங்களுடைய இந்த கேப்ஸிகம் பச்சடி மிகவும் நல்ல டேஸ்ட். அத்துடன் உங்களோட ரவைபோண்டாவும் மிகவும் நல்ல டேஸ்ட்.நன்றாவும் வந்திருந்தது. நன்றி விஜி.அன்புடன் அம்முலு...

ஹாய் விஜி,

உங்களுடைய குடைமிளகாய் பச்சடி தயிர் சாதத்திற்கு மிகவும் நன்றாக இருந்தது.

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் விஜி இன்று உங்கள் கேப்சிகம் பச்சடி சிவப்பு குடைமிளகாயில் செய்தேன். சுவையாக இருந்தது. நன்றி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!