கர்ப்ப சந்தேகங்கள்

கவனிக்கவும் இந்தக்க்கேள்விகளுக்கு சாதரணமான கர்ப்பத்தை கருத்தில் இருத்தி பதி தர வேண்டாம்?
பல வருடங்களாக சிரமப்பட்டு சிக்கலான கர்ப்பங்களையும் சந்தித்து கர்ப்பப்பையும் உடலும் பலவீனம் அடைந்தவர்கள் கேட்கும் கேள்விகளாக எடுத்து பதில் தரவும்.

சூட்டு உடம்புக்காரர்கள் கர்ப்ப காலத்தில் என்னென்ன உணவுகளை எடுத்து உடல் சூட்டை சமப்படுத்தலாம்?

சூட்டு உடம்பு குளிர்ச்சியான உடம்பு என்று எவ்வாறு கண்டுபிடிப்பது?

கர்ப்ப காலத்தில் வாரத்தில் எத்தனை தடவை சாதரண குளியலும் எத்தனை தடவை தலைக்கு குளியல் எடுப்பதும் நல்லது?

குளிர்ச்சி உடம்பு என்றால் மாலை ஆறு மணிக்கு எல்லாம் பாடம் சில்லிட ஆரம்பித்து விடும். அதே சூடுன்னா கண் எரிச்சல் பாதசூடு எல்லாம் இருக்கும். நிறைய தண்ணீர் குடிச்சாலே போதும், அதிக குளுமையும் கூடாது. நல்ல சத்துள்ள பழங்கள், பச்சை காய்கறிகள் (folic acid) உள்ள உணவுகளை உண்டால் நல்லது. முக்கியமா நீர் கடுப்பு வராமல் பார்த்து கொள்ள வேண்டும். வெது நீர்,barley கஞ்சி போன்றவை மிகவும் நல்லது.
மாலை 6.00 மணிக்கு மேல் நிச்சயமாக தலை குளிப்பதை தவிர்க்கணும். நீண்ட முடின்னா 3 நாள் ஒரு வாரத்துக்கு போதும். கொஞ்சம் முடியை கத்தரித்தால் தேவலை. மண்டை சூடு ௬டவே ௬டாது

Life is the way we look at it.

அழகாக தெளிவு படுத்தியதற்கு ஆயிரம் நன்றிகள் திருமதி வர்மா .

1.பார்லி கஞ்சி கர்ப்பம உறுதிப்படுத்தப்பட்ட நாளிலிருந்து தினமும் எடுத்துக்கொள்ளலாமா?

2.அசைவம் உண்ணும் நாட்களிலும் ஸ்லோகங்கள் படிக்கலாமா?விபூதி போட்டுக்கொள்ளலாமா?

3.முழுமையான ஓய்வு தேவை என்ற நிலைக்கு வந்த பின் கம்யூட்டரில் அதிக நேரம் செலவழிப்பதும் அதிக நேரம் போன் பேசுவதும் தவிர்க்க்கப்பட வேண்டுமா?

4.என்னென்ன அறிகுறிகள் தோன்றினால் உடனே மருத்துவரை பார்க்க வேண்டும்?

5.ஆப்பிள்,கொய்யா,ஒரேஞ்,அவகோடா,மாதுளை,மெலோன் இந்த பழங்கள் எல்லாவற்றையும் சேர்த்து தினமும் சாலட் செய்து சாப்பிடலாமா?

6.உணவில் நல்லெண்ணெய் பயன் படுத்தலாமா?எள் கூடாது என்கிறார்களே அதனால் கேட்கிறேன்.

அதிக தூக்கம் அதிக ஓய்வு கர்ப்பத்துக்கு பாதுகாப்பாக இருக்குமா?அதாவது டாக்டர் நன்கு ஓய்வெடுக்கும்படி சொன்னால் அதற்கு என்ன அர்த்தம் கூடுதலாக படுத்தே இருக்க வேண்டுமா?

????????????

முட்டைக்கோப்பி செய்வதற்கான சரியான முறையை அனுபவம் வாய்ந்த யாராவது தந்து உதவ முடியுமா?
இதற்கு சிவப்புக்கருவையும் சேர்ப்பதா?

?????????

கர்ப்பமாக இருக்கும்போது படுத்திருக்கும்போது நீண்ட நேரம் லாப்டப்பை பக்கத்திலேயே வைத்து வேலை செய்து கொண்டே இருப்பது தவறா?இது கர்ப்பத்துக்கு கேடு விளைவிக்குமா?

தயவு செய்து யாரவது பதில் தெரிந்தவர்கள் சொல்லி உதவுவீர்களா?

கர்பகாலத்தில் பலபல விதமான சந்தேகங்கள் இன்னும் சரியாக தெளியப்படாமல் இருக்கிறது..உதாரணத்திற்கு பப்பாளி,அன்னாசி சாப்பிடலாமா வேண்டாமா,, கணினியில் அதிக நேரம் செலவிடுவது ஆபத்தா இல்லையா என்பது போன்ற சந்தேகங்கள்.நமக்கு எந்தளவுக்கு குழந்தையின் மேல் அக்கரையோ அந்தளவுக்கு கூடுமானவரை சந்தேகம் தரும் காரியங்களை தவிர்த்து விடுதல் நலம்
லேப்டாப்பை அருகில் வைத்தால் அதிலிருந்து சூடு எழும்பும் சிறிது நேரம் மடியில் வைத்தால் தொடையெல்லாம் சூடேறும்..அதனால் அருகில் வைத்தால் சரியில்லை என்று தோன்றுகிறதென்றால் அதனை தவிர்த்து விடுதல் நல்லது தானே

மேலும் சில பதிவுகள்