ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்
- ஓட்ஸ் – 1 கப்
- ரவை - 1/4 கப்
- கடலைமாவு - 1/4 கப்
- மோர் – 2 கப் (கரைப்பதற்கு தேவையான அளவு)
- காரட் - 2 டேபிள்ஸ்பூன்
- முட்டைகோஸ் - 2 டேபிள்ஸ்பூன்
- குடைமிளகாய் – 2 டேபிள்ஸ்பூன்
- தேங்காய்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
- மிளகு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- முந்திரிப்பருப்பு(பொடித்தது) - 1 டேபிள்ஸ்பூன்
- உப்பு - தேவைக்கு
- எண்ணெய் - சுடுவதற்கு
- முதலில் ஓட்ஸையும், ரவையையும் ஒன்றாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்.
- கடலை மாவையும் பச்சை வாசனை போகும்வரை வறுத்து வைக்கவும்.
- காரட், முட்டைகோஸ், குடைமிளகாய், தேங்காய்த்துருவல் எல்லாவற்றையும் மெல்லியதாக அரிந்து வைக்கவும்.
- தேங்காயை துருவி கொள்ளவும். மிளகு, சீரகம், முந்திரிப்பருப்பு மூன்றையும் ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும்.
- வறுத்த மாவு கலவைகளை ஒன்றாக உப்பு போட்டு கலக்கவும். அதனுடன் மோர் விட்டு கரைக்கவும். அதில் பொடித்த மிளகு, சீரகம், முந்திரிபருப்பு மூன்றையும் போடவும்.
- காரட், முட்டைகோஸ், குடைமிளகாய், தேங்காய்த்துருவல் எல்லாவற்றையும் மாவுடன் கலக்கவும்.
- ஊத்தாப்பம் பதத்திற்கு கரைத்தவுடன், சூடான தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். இதை தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.
- தேங்காய் சட்னி (தேங்காய், பொட்டுகடலை, பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து அரைக்கவும். பின் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்க)
Note:
6 வயது குழந்தை முதல், 60 வயது பெரியவர் வரை எல்லாருக்கும் எளிதில் சீரணிக்க கூடிய உணவு ஓட்ஸ். ஸ்காட்லாந்து மக்களின் முக்கிய உணவான ஓட்ஸ், நிறைய வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது. இதில் உள்ள நார்சத்து (soluble fibre) நம் உடம்பிலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது. அப்புறமென்ன இனிமேல் ஓட்ஸ் என்றால் உங்கள் நினைவுக்கு வருவது கஞ்சி மட்டுமில்லை. இந்த ஊத்தாப்பமும்தான். இதை சூடாக சாப்பிட்டால் சுவை தூக்கலாக இருக்கும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்

சகோதரி! இன்று இரவு உணவிற்காக உங்களின் குறிப்பினை பார்த்து இந்த ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம் செய்திருந்தேன். நன்றாக இருந்தது. வீட்டில் விரும்பி சுவைத்துச் சாப்பிட்டார்கள். இந்தக் குறிப்பினைத் தந்த உங்களுக்கு நன்றிகளும், பாராட்டுக்களும்.
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
மிக்க நன்றி.