கிட்ஸ் பேக்டு (Baked) மஷ்ரூம்

தேதி: June 17, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய பட்டன் காளான் மொட்டுகள் – 6
வேக வைத்த உருளைக்கிழங்கு - ஒன்று
சின்ன வெங்காய விழுது – ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரைத் தேக்கரண்டி
தக்காளி சாஸ் – ஒரு தேக்கரண்டி
சோயாசாஸ் - ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் (அல்லது சீஸ்) – 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு


 

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தையும், இஞ்சி பூண்டையும் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
காளான் துண்டுகளில் உள்ள தண்டு பகுதியை மட்டும் மெதுவாக எடுத்து தனியே வைக்கவும்.
தனியே எடுத்த அந்த தண்டு பகுதியை மட்டும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
காளான் துண்டுகளின் மீது முழுவதுமாக (உட்புறம் மற்றும் வெளிபுறங்களில்) வெண்ணெயை தடவி வைக்கவும்.
வாணலியில் மீதி வெண்ணெயை போட்டு வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு நறுக்கிய காளான் தண்டுகளை போட்டு நன்றாக வதக்கி விட்டு அதனுடன் மசித்த உருளைக்கிழங்கையும் போட்டு வதக்கவும்.
அதன் பின்னர் மிளகுத்தூள், உப்பு மற்றும் சாஸ் வகைகளை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து ஆற விடவும்.
ஆறியதும் எடுத்து வெண்ணெய் தடவி வைத்திருக்கும் காளானுக்குள் வைத்து ஸ்டஃப் செய்யவும்.
அவனை (oven) 350 F ல் முற்சூடு செய்து வைத்துக் கொள்ளவும்.
ஸ்டஃப் செய்து வைத்திருக்கும் காளான் துண்டுகளை ஒரு பேக்கிங் ட்ரேயில் அடுக்கி வைக்கவும்.
பேக்கிங் ட்ரேயை முற்சூடு செய்த அவனில் 10 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் எடுக்கவும். காளான் நன்றாக நிறம் மாறி வெண்ணெய் உருகி எல்லா பக்கங்களிலும் வழிந்து இருக்கும்.
சூடான சுவையான பேக்டு காளான் ரெடி. ஆறியவுடன் பரிமாறவும்.


சூடான சுவையான பேக்டு காளான் ரெடி. ஆறியவுடன் பரிமாறவும். காளானில் நிறைய சத்துக்கள்(புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்பு, வைட்டமின் (A,D,H,B1,B2…,….) இருப்பதுடன். இதை சாப்பிடுவதால் முக்கியமாக புற்று நோய் வராமல் தடுக்கும் எதிர்ப்பு சக்தி கிடைப்பதாக கண்டு பிடித்துள்ளார்கள். இத்தனை சத்துக்கள் உள்ளதை நம் குழந்தைகளும் சாப்பிடவேண்டும் தானே.

மேலும் சில குறிப்புகள்


Comments

My daughter and my husband both like mushroom very much, but this is a very new recipe and mouth watering elu, sure will try and let u know, thanks.