ராகி புட்டு பயறு

தேதி: June 18, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

இந்த ராகிபுட்டு பயறு குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக <b> திருமதி. ஆசியா உமர் </b> அவர்கள் செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும்.

 

ராகிமாவு - கால் கிலோ
தண்ணீர் - 250 மில்லி
பாசிப்பயறு - கால் கிலோ
தேங்காய் - ஒன்று (சிறியது)
உப்பு - தேவைக்கு


 

முதலில் தேவையானவைகளை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ராகி மாவை தேவையான அளவு தண்ணீர் தெளித்து, தேவைக்கு உப்பு சேர்த்து விரவவும்.
விரவி வைத்த மாவை அப்படியே சிறிது நேரம் வைத்திருக்கவும். தேங்காயை துருவி வைக்கவும்.
மாவை மிக்ஸியில் பெரிய கப்பில் போட்டு மூன்று சுற்று சுற்றி எடுக்கவும். இதைப் போல் மாவு முழுவதையும் மூன்று முறையாக சுற்றி எடுக்கவும். இப்பொழுது மாவு பூப்போல ஆகிவிடும்.
பாசிப்பயறை வேக வைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும்.
புட்டுக்குழலில் முதலில் தேங்காய் துருவலை வைத்து பின்பு மாவை வைத்து நிரப்பவும். அதன் மேல் மீண்டும் தேங்காய் துருவலை வைத்து நிரப்பவும்.
குக்கரில் தண்ணீர் வைத்து கொதிவந்ததும் அதில் புட்டுக்குழலை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான, சத்தான ராகிபுட்டு தயார். இதனை வேக வைத்த பாசிப்பருப்புடன் பரிமாறவும். சீனி மற்றும் தேங்காய் துருவலுடன் சாப்பிடலாம். சீனி விரும்பாதவர்கள் அப்படியே சாப்பிடலாம்.

பாசிப்பயறை வேக வைக்க, புட்டு வேக வைக்கும் குக்கரில் கூட ஒரு செட் புட்டு அவிக்க ஆகும் நேரம் வைத்து வேக வைத்து எடுக்கலாம். பயறு குழைந்து விடாமல் பக்குவமாக அவிக்க வேண்டும். பயறை விருப்பப்பட்டால் தாளித்து, மசாலா போல் செய்தும் பரிமாறலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆசியா நல்ல குறிப்பு. எங்க அம்மா இது போல் தான் செய்வாங்க...:) எனக்கும் ரொம்ப இஷ்டம் அடிக்கடி செய்வேன். ஆனால் இதுவரை பயிறு வைத்து சாப்பிட்டது இல்லை... நெய்யும் சர்க்கரையும் தான் கலப்பேன். உங்கள் பயிறு வகையை முயற்சிக்கிறேன். ஆமாம்... ஏன் குழலை குக்கர் மேல் வைத்து இருக்கிறீர்கள்??!! அதன் கூடவே கீழே சொம்பு போல் வருமே..... தப்பா நினைக்காதிங்க, இது மாதிரி பார்த்ததில்லை அதான் கேக்கறேன்... புதுசா பார்த்தா அது ஏன்னு தெரிஞ்சிக்காம விட முடியல. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் திருமதி. ஆசியா உமர்
நல்லா குறிப்பு குடுத்திருக்கிரிர்கள் நன்றி.
•ராகிமாவு -குரக்கன்மா தானே
சுடுதண்ணி விட்ட குழக்கிறது?
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

ராகி மாவுன்னா குரக்கன் மாவே தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எங்கள் வீட்டு ஃபேவரைட் டிபன் புட்டுதான்.வாரம் ஒருமுறை கண்டிப்பாக செய்வேன்..இதே
முறையில்(பயறு வேகவைப்பதுகூட) தான்
நானும் செய்வேன்.ஆனால் இந்த
காம்பினேஷனோடு பொரித்த அப்பளம்
பொடித்து போட்டு பிசைந்து சாப்பிடுவோம்.
பயறு தவிர்த்து புட்டோடு கனிந்த வாழைப்பழம்
சீனி சேர்த்து பிசைந்து சாப்பிட்டாலும் சுவை நன்றாக இருக்கும்.
கடலைகறியும் சூப்பராக இருக்கும்..
இல்லையா ஆசியா?
புதிதாக செபவர்கள் இந்த காம்பினேஷனும்
முயற்சி செய்யட்டுமே என சொன்னேன்....
தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நன்றாக இருக்கு. எங்க ஊர் அயிட்ட்ம் ஆச்சே நல்லா இல்லாமா இருக்கும என்ன?
புட்டு,பயிறு,பப்படம்,பழம் இந்த காம்பினேஷன் சொல்லவே வேண்டாம், அப்படியே காலியாயிடும்.கடலை கறியும் சேர்த்தும் சாப்பிடுவாங்க.
ரொம்ப நல்லாவே ஸ்டெப் பை ஸ்டெப் படம் எடுத்து போட்டிங்க.
வனி இந்த மாதிரி தான் இப்பவெல்லாம் எல்லாரும் யூஸ் செய்கிறாங்க என்கிட்டேயும் இதே போல் குழல் இருக்கு, என் தோழியிடம் கொட்டங்குச்சி(சிரட்டை) ஷேப்பில் இருக்கு (தேங்காய் துருவின் கொட்டாங்குச்சி) அதே ஷேப்பில் ஸ்டிலில் கிடைக்கிறது அதையும் பயன் படுத்துகிறார்கள்( மூங்கிலில் இதே போல் குழல் வருகிறது.அதையும் பயன் படுத்துகிறார்கள்.

புட்டுப் பிரியர்களே...
ஆகா மிக அருமையாக குரக்கன் குழல்புட்டுச் செய்து காட்டியிருக்கிறீங்கள் ஆசியா. ஊருக்குப் போயும் குறிப்புக்கொடுக்கத்தொடங்கியமைக்குப் பாராட்டுக்கள்.

என்னிடம் ராகி மா(நானும் கண்டுபிடித்துவிட்டேன், குரக்கன்தான் ராகி என்று) இருக்கு. எனக்கொரு சந்தேகம், இது பச்சைமாவா அல்லது வறுத்தமாவோ/ அவித்தமாவோ? பொதுவாக நாம் மற்றப்புட்டுக்குப் பயன்படுத்தும் மாவெல்லாம் அவித்தது/ வறுத்தது, இந்த ராகிமாவில் இதுவரை அவிக்கவில்லை அதுதான் கேட்கிறேன். முன்பு அம்மா செய்து சுடச்சுட சீனியுடன் அல்லது சக்கரையோடு தருவா சுவையாக இருக்கும்.

சாதாரண கோதுமைக் குழல்புட்டுக்கு, பொரித்து இடித்த சம்பல் அல்லது அவித்த மிளகாய்ப் பொரியல் சூப்பரோ சூப்பர்....

வனிதா இதுவும் குழல்புட்டு செட்தான், பார்க்க அப்படித்தானே தெரியுது. கொஞ்சம் பெரியது. என்னிடம் உள்ளதும் கீழே செம்புபோல் சதுரமாக இருக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா இந்த புட்டு மாவு வறுக்க, அவிக்க தேவை இல்லை.... ராகி மாவை அப்படியே பயன் படுத்துங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனிதா...
அப்படியா?, அப்போ சனி ஞாயிறு எப்படியும் செய்திட வேண்டும். மா வாங்கி வந்து 2 மாதங்களாகிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

கருத்து தெரிவித்த அனைத்து தோழிகளுக்கும் மிக்க நன்றி,
வனிதா,சுகா,விஜி,இளவரசி,அதிரா உங்கள் பதிவு எனக்கு மிக்க மகிழ்ச்சி.
புட்டுக்குழல் அடியில் எனக்கும் செம்பு போல் தான் வாங்கும் போது இருந்தது,அதில் வைத்து எடுப்பதை விட குக்கரில் வெயிட் போடும் இடத்தில் புட்டுக்குழலை வைத்து வேக வைத்து எடுப்பது எனக்கு ஈசியாக இருந்தது,நாம் செட்டாக வாங்காமல் இப்படி குழல் மட்டும் கூட வாங்கி குக்கரில் வைத்து அவிக்கலாம்.
அப்புறம் அதிரா மாவை வறுக்க தேவை இல்லை.அப்படியே தண்ணீர் தெளித்து விரவி அவிக்கலாம்.
ஆமாம் பயறு பப்படம் புட்டு நல்ல காம்பினேஷன்.விஜி ,அதிரா,வனிதா,இளவரசி நாம் புட்டுடன் நீங்கள் சொன்னபடி சேர்த்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

கலோ ஆசியா மேடம்! ராகிபுட்டு சுப்பர். நான் இதேமாதிரி அரிசி மாவில் செய்வேன்.குரக்கன் (ராகி )மாவில் செய்வது புதுவிதம் .குரக்கன்மா இவ்விடம் எடுப்பது கஷ்டம்.கிடைக்கும்போது கட்டாயம் செய்வேன். நிச்சயம் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன். நன்றி இது ராணி.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

என்ன அழகான பெயர்,குரக்கன் என்பது ராகியோ,ராணி,மாவு கிடைக்கும் பொழுது செய்து விட்டு சொல்லுங்க.மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நன்றி வனிதா,நன்றி திருமதி. ஆசியா உமர் வெறும் குளிர் தண்ணியில் தானே குழைப்பது.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

ஆமாம் புட்டுக்கு சாதாரண தண்ணீரை தான் தெளித்து கையால் மிக்ஸ் செய்ய வேண்டும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ராகிப்புட்டு நன்றாக இருக்கு.

எங்க வீட்டில் புட்டுமாவு போட்டு,தேங்காய்த்துறுவல் இடையிடையே போடும்போது சின்ன புட்டு (பனைமர பதநீரில் கிடைக்கக்கூடிய) 2...3...இடையில் வைத்து விடுவோம்.புட்டு வேகும்போது அது இளகி புட்டுடன் சேர்ந்து விடும்.அதன் சுவையும்,வாசமும் ரெம்ப அருமையாக இருக்கும்.

பசித்தவனுக்கு பகிர்ந்தளித்தால் நீ
புசிக்கும் உணவு பெருகிவிடும்

பசித்தவனுக்கு பகிர்ந்தளித்தால் நீ
புசிக்கும் உணவு பெருகிவிடும்

தங்கள் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.நீங்கள் சொன்ன படி வைத்து புட்டு செய்தாலும் சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.இதே முறையில் கோதுமை மாவில் புட்டும் செய்யலாம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா... வெற்றி..வெற்றி...
ஆசியா குரக்கன் குழல்புட்டு செய்து வெற்றியடைந்துவிட்டேன். சுடச் சுட சக்கரையோடு என்ன சுவை தெரியுமோ.. படம் அனுப்புகிறேன் பாருங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஆசியா... நேற்று மாலை உங்க புட்டும் பயிறும் செய்துட்டேன். என்னவருக்கு எப்போதும் நெய் சேர்த்தால் பிடிக்காது. இப்படி குடுத்ததும் விரும்பி சாப்பிட்டார். :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் இருவரின் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி,மிக்க நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த ராகிபுட்டின் படம்

<img src="files/pictures/aa305.jpg" alt="picture" />

அருமை,புட்டும் பரிமாறிய விதமும் சூப்பர்.வெளியிட்ட அட்மினுக்கும் மிக்க நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா சத்தானா ராகி (கேழ்வரகு, குர்க்கன் மா) புட்டு பயறு நல்ல இருக்கு/ப‌ய‌று எல்லாமே இனிப்பில் தான் எங்க‌ எல்லோருக்கும் பிடிக்கும்.

வார‌ம் ஒரு முறை புட்டு தான் எங்க‌ வீட்டில் புட்டு எல்லோருக்கும் பிடித்த‌ டிப‌ன் அயிட்ட‌ம் அதிலும் ராகி ரொம்ப‌ ஜோராக‌ இருக்கும்.

என்ன அதிரா இது வரை குர்க்கான் மா தான் ராகின்னு தெரியாதா அப்ப நான் அனுப்பிய ராகி கஞசி ய பார்த்தீஙக்ளா?ஆகா பாலக் தான் ஸ்பினாச்சுன்னு தெரிய வேறு ரொம்பநாள் எடுத்து அதிரா உஙக்ளுக்கு

Jaleelakamal