கோதுமை தோசை / ரொட்டி (சுகர் உள்ளவர்களுக்கு)

தேதி: June 19, 2009

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

கோதுமை மாவு -- 3 கப்
சிவப்பு மிளகாய் வத்தல் -- 4 என்னம் (கிள்ளிக் கொள்ளவும்)
சின்ன வெங்காயம் -- 1 கப் பொடிதாக நறுக்கியது.
கறிவேப்பிலை -- 2 இனுக்கு
உப்பு -- ருசிக்கேற்ப


 

கொடுத்த பொருட்களை எல்லாம் கலந்து சப்பாத்திக்கும் இல்லாமல் தோசைக்குமில்லாமல் உள்ள பதத்தில் பிசையவும்.
( சுமாராக ,3 கப் மாவிற்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்க்கலாம்)

தோசைக்கல்லை சூடு செய்து கையால் மாவை கொட்டி அப்படியே கையாலே வட்டமாக பரப்பி ரொட்டியாக வார்க்கவும்.
(தேவை எண்ணைய் ஊற்றிக் கொள்ளவும்.)
வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து சாப்பிடலாம்.
சட்னியே தேவை இல்லை.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் சுபா! உங்கள் கோதுமைத்தோசை செய்தேன்.
நல்ல சுவையாக இருந்தது.
எல்லோரும் விரும்பி சாப்பிட்டார்கள்.
நன்றி இது ராணி.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.