காபேஜ் கோப்தா கறி

தேதி: June 20, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

<b> கோப்தாவிற்கு </b>
கோஸ் - பாதி
கடலை பருப்பு - 3 தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - மூன்று
கடலை மாவு - கால் மேசைக்கரண்டி
அரிசி மாவு - கால் தேக்கரண்டி
தேங்காய் - மூன்று மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
<b> கிரேவிக்கு </b>
வெங்காயம் - ஒன்று
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - இரண்டு பல்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சீரக தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லி தூள் - மூன்று தேக்கரண்டி
தயிர் - ஒரு கப்
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

கோஃப்தா செய்ய: கோஸை பொடியாக நறுக்கி கடலை பருப்பு சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெந்ததும் எடுத்து நீரை நன்றாக வடித்து விட்டு ஆறியதும் கோஸில் உள்ள நீரை பிழிந்து எடுத்து விடவும். அதனுடன் சீரகம், மிளகாய் தூள், தேங்காய், உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும். பிறகு கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாயை சேர்த்து சிறிதளவு நீர் தெளித்து பிசைந்து அரை மணி நேரம் வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் முட்டைகோஸ் கலவையை சிறு சிறு உருண்டையாக உருட்டி போட்டு பொரிந்ததும் எடுக்கவும்.
எண்ணெயில் போட்டவுடன் கரண்டியால் திருப்பி விடக்கூடாது. அப்படி திருப்பி விடும் போது கோஃப்தா உடைந்து விடும். கோஃப்தா பொரிந்து மேல் எழும்பி வந்த பின்னர் வெந்ததும் எடுத்து எண்ணெயை வடிய விடவும்.
கிரேவி செய்ய: கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகத்தை போட்டு பொரிய விடவும். பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து அனைத்து தூள்களையும் தயிரில் கலந்து வதக்கியவற்றுடன் ஊற்றவும்.
கிரேவி திக்காக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். கொதிக்க ஆரம்பித்ததும் கிளறிக் கொண்டே இருக்கவும். நுரைத்து வந்ததும் பொரித்து வைத்துள்ள கோப்தாகளை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
சுவையான கேபேஜ் கோஃப்தா கறி ரெடி. மேலே கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். அறுசுவையில் குறிப்புகள் வழங்கிக் கொண்டிருக்கும் <b> திருமதி. அம்மு மது </b> அவர்கள் வழங்கியுள்ள குறிப்பு இது. நீங்களும் இதனை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும். இதைப் போல் இன்னும் பல குறிப்புகளை நம்முடன் பகிர்ந்துக் கொள்ள உள்ளார்.

இதனை வெறும் சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும். அனைத்து சப்பாத்தி, ரொட்டி வகைகளுக்கும் மிக பொருத்தமாக இருக்கும். கொஞ்சம் நீர்க்க செய்தால் சூப் போலவும் குடிக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

காபேஜ் கோஃப்தா கறி பார்க்கவே மிகவும் நன்றாக உள்ளது. செய்முறையும் எளிதாக இருப்பதால் கண்டிப்பாக வீட்டில் செய்து பார்க்கிறேன்.

கோசிற்கு பதிலாக வேறு ஏதாவது காயை சேர்க்கலாமா?

நன்றி

Nothing is impossible in this world
Because impossible itself means
I'm Possible.

Nothing is impossible in this world
Because impossible itself means
I'm Possible.

அருமையாக இருக்கு.உண்மையில் கோப்தா நான் இதுவரை முயற்சி செய்ததே இல்லை.இத பார்த்தவுடன் செய்து பார்க்க தோன்றுகிறது...
அழகாக நேர்த்தியாக செய்து காட்டியிருக்கிறீர்கள்....

நல்ல குறிப்புக்கு நன்றி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய் லதா,

எப்டி இருக்கீங்க?பாராட்டுக்கு ரொம்ப நன்றி.கோசிற்கு பதிலாக உருளை கிழங்கு,வாழைக்காய்,சேப்பங்கிழங்கு சேர்த்து செய்யலாம்.

அன்புடன்,
அம்மு.

அன்புடன்,
அம்மு.

ஹாய் இளவரசி,

எப்டி இருக்கீங்க?பாராட்டு குறித்து மிக்க நன்றி.இது வரை செய்து பார்த்ததில்லையா?இனிமேல் கண்டிப்பாக செய்து பாருங்கள்.ரொம்ப நல்லா இருக்கும்.செய்து பார்த்துவிட்டு கண்டிப்பாக கருத்தை சொல்லுங்கள்..

அன்புடன்,
அம்மு.

அன்புடன்,
அம்மு.

அட்மின்..மிக்க நன்றி...

அன்புடன்,
அம்மு.

அன்புடன்,
அம்மு.

நானும் கேபேஜ் கோப்ஃதா செய்வேன். ரொம்ப சிம்பிள் நான் கடலை பருப்பு சேர்க்காமல் செய்வதுண்டு. அடுத்த முறை இதே மாதிரி செய்கிறேன்.
என்னோட குறிப்பில் கூட இருக்கு என்று நினைக்கிறேன்.

வாவ்!!!!
பார்க்கவே ஆசையாக உள்ளது.செய்து பார்த்து இல்லை சுவைத்து சொல்கிரேன்.

Anbe Sivam

Anbe Sivam

அம்மு, மிக அருமையான புதுவிதமான கறி செய்துகாட்டியிருக்கிறீங்கள். முக்கியமாக கோஸ் போட்டுச் செய்திருப்பது அருமை. இந்தக் கிரேவியின் கலரில் எந்தக் கறியைப் பார்த்தாலும் எனக்கு உடனே சாப்பிடவேணும்போல் இருக்கும்.

முடியுமானபோது நிட்சயம் செய்து சொல்கிறேன். நல்ல அழகாகச் செய்திருக்கிறீங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி அம்மு. என் கணவருக்கு கோஸ் பிடிக்காது.அதனால் நீங்கள் குறிப்பிட்டபடி உருளை வைத்து செய்தேன், மிகவும் நன்றாக இருந்தது.

Nothing is impossible in this world
Because impossible itself means
I'm Possible.

Nothing is impossible in this world
Because impossible itself means
I'm Possible.

விஜி,அதிரா,சுடர்

உங்களின் பாராட்டு குறித்து மிக்க மகிழ்ச்சி.கண்டிப்பாக செய்து பாருங்கள்.நன்றாக வரும்.விஜி ஒரு தரம் கடலை பருப்பு சேர்த்து செய்து பாருங்கள்..க்ரிஸ்ப்பியா வரும்.லதா நல்ல வந்ததா? ரொம்ப சந்தோஷம்.

அன்புடன்,
அம்மு.

அன்புடன்,
அம்மு.

hi i tried this and it came out very well, thank u

அம்மு,
உங்கள் கோப்தா கறி செய்து சாப்பிட்டும் முடித்தாயிற்று, சொல்ல நேரம் கிடைக்கவில்லை. மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் உங்களைப்போல் எனக்கு கிரேவி அதிகம் வரவில்லை. என் உருண்டைகள் அதிகமோ தெரியவில்லை, கிரேவியை அப்படியே உறிஞ்சிவிட்டன உருண்டைகள். சூப்பர் சுவையாக இருந்தது. கபேஜ் சாப்பிட இதுவும் ஒரு நல்ல முறைதான்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பாக்யலக்ஷ்மி ரொம்ப நன்றி செய்து பார்த்து குருத்து தெரிவித்ததற்கு...அதிரா கிரேவியை உருண்டைகள் உறிஞ்சி விட்டதா?அரிசி மாவு சிறிது அதிகம் சேர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்..உங்களுக்கு பிடித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி...

அன்புடன்,
அம்மு.

அன்புடன்,
அம்மு.

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த கபேஜ் கோப்தா கறியின் படம்

<img src="files/pictures/aa306.jpg" alt="picture" />

அதிரா,

படம் பார்கவே சூப்பரா இருக்கு.naan நினைக்கறேன் நீங்கள் ரொம்ப கெட்டியான தயிரோ அல்லது தயிர்ரை அடுப்பில் சேர்த்ததும் சிறிது நேரம் அதிகமாக கொதிக்க விட்டுடீர்கள் என்று நினைக்கிறேன் அப்படி செய்தால் தான் உரிந்துக்கொள்ளும்...ஆனாலும் ருசி மாறாமல் தான் இருக்கும்...உங்கள் படம் அருமை..

அன்புடன்,
அம்மு.

அன்புடன்,
அம்மு.