பீர்க்கங்காய்பொரியல்

image

வழங்கியவர் : ESMS-4

தேதி : ஞாயிறு, 21/06/2009 - 10:44

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

5
1 vote
Your rating: None
 

 

  • பீர்க்கங்காய் -2
  • சின்னவெங்காயம் -5
  • பச்சைமிளகாய் -1
  • கறிவேப்பிலை -சிறிது
  • மஞ்சள்பொடி -1/4ஸ்பூன்
  • சாம்பார்பொடி -1ஸ்பூன்
  • உப்பு -தேவையான அளவு
  • தேங்காய்துறுவல் -1/4கப்
  • எண்ணை -1ஸ்பூன்
  • கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு -1/2ஸ்பூன்

 

  • பீர்க்கங்காய் மேல்தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கவும்.
  • வெங்காயம்,மிளகாய் நறுக்கிவைக்கவும்.
  • வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு,பருப்புகளை போட்டு வெங்காயம் போடவும்.மிளகாய்,கறிவேப்பிலை போட்டு வதக்கி நறுக்கிய காய்போடவும்.
  • காய் நன்கு வதங்கி தண்ணீர்விடும் அப்பொழுது மஞ்சள்பொடி,சாம்பார்பொடி போட்டு தேவையான உப்பு போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து மூடிவைத்து வேகவிடவும்.
  • காய்வெந்தவுடன் தேங்காய்துறுவல் போட்டு கிளறி தண்ணீர் சுண்டியவுடன் இறக்கவும்.