இன்ஸ்டெண்ட் முந்திரி பால்ஸ்

தேதி: June 21, 2009

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முந்திரி பவுடர் - 100 கிராம்
மில்க் பவுடர் - 100 கிராம்
ஐஸிங் சுகர் - 200 கிராம்
பால் - 1 டேபிள்ஸ்பூன்
மில்க் மெய்ட் - மாவு பிசைய தேவையான அளவு
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
பாதாம் - 8


 

பாதாமை சுடு நீரில் ஊற வைக்கவும். முதலில் முந்திரியை மைக்ரோவேவில் 30 வினாடிகள் வைத்து எடுத்தால் அதிலுள்ள ஈரப்பதம் போய் விடும்.
பிறகு மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றி பொடித்து சலித்தால் அரைப்படாமல் கொரகொரப்பாக உள்ள துகள்கள் தனியே பிரிந்து விடும்
பிறகு மறுபடியும் பொடித்து சலித்து நைசாக உள்ள பொடியை எடுத்து வைக்கவும்.
முந்திரிப்பொடி, பால்பவுடர், ஐஸிங் சுகர் மூன்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்து வைக்கவும்
ஒரு டேபிள்ஸ்பூன் பாலில் குங்குமப்பூவை கரைத்து வடிகட்டி, கலந்து வைத்த மாவில் கொட்டி கலக்கவும்.
பிறகு மில்க் மெய்டை ஊற்றி பிசையவும்.
பிறகு பிசைந்த மாவை சப்பாத்திபோல் தேய்த்து அதன் மேல் தேய்ப்பதற்கு அவ்வப்போது தேவைப்பட்டால் ஐஸிங் சுகர் தூவவும். பிறகு ஊறவைத்த பாதாமை தோலுரித்து துருவி, துருவலை சப்பாத்திபோல் தூவவும்.
பிறகு விரும்பிய வடிவங்களில் வெட்டவும்.


அடுப்பு பயன்படுத்தாமல் செய்யும் எளிய இனிப்பு இது. செய்வற்கான நேரமும் குறைவு

மேலும் சில குறிப்புகள்