கேரட் அல்வா

தேதி: June 21, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

பெரிய கேரட் - 1/4 கிலோ
சர்க்கரை - 200 கிராம்
பால் - 1/2 லிட்டர்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10 - 15
கிஸ்மிஸ் - 2 டீஸ்பூன்
ஏலப்பொடி - 1 பின்ச்
குங்குமப்பூ - சிறிது


 

கேரட்டை தோல் சீவி துருவிக்கொள்ளவும். 1 டீஸ்பூன் நெய்யை வாணலியில் விட்டு கேரட் துருவலை பச்சை வாசனை போகும் வரை வதக்கிக்கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் பாலை பாதியாக குறுகும் வரை காய்ச்சவும். வதக்கிய கேரட்டில் பாலை சேர்த்துக் கிளறவும். ஓரளவு பால் வற்றியதும் சர்க்கரை சேர்க்கவும்.
சிறிது, சிறிதாக நெய் விட்டுக்கிளறவும். ஏலப்பொடி, பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்துக்கிளறவும்.
அல்வா பதம் வந்ததும் கிஸ்மிஸ், முந்திரி சேர்த்துக் கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நான் இதை செய்து பார்க்கிறேன் நன்றி

ஸாதிகா மேடம் எப்படி இருக்கீங்க, உங்க கேரட் ஹல்வா செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது.போன வாரமே செய்துட்டேன் ஆனா பின்னூட்டம் இப்பதான் கொடுக்க முடிந்தது:)
ரொம்ப நன்றி மேடம்.