மாசி கொழுக்கட்டை

தேதி: June 21, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வறுத்து அரைத்த அரிசி ரவை - 2 கப்
தேங்காய் - 1/2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மாசிப்பொடி - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கு
சில்லி பிளேக்ஸ் - 1 டீஸ்பூன்


 

தேங்காயை நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த தேங்காயுடன், உப்பு, மாசிப்பொடி, நறுக்கிய மிளகாய், வெங்காயம், சில்லி பிளேக்ஸ் அனைத்தையும் கலந்து கொள்ளவும்.
அரிசி மாவை சிறிது, சிறிதாக சேர்த்து கலந்து கெட்டியாக கலந்து கொள்ளவும். இந்த மாவு 1/2 மணி நேரம் ஊற வேண்டும். கொழுக்கட்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைக்கவும்.
நன்கு வெந்ததும் எந்த கிரேவியுடனும் அல்லது கிரேவி இல்லாமலும் சாப்பிடலாம்.


மாசிக்கு பதிலாக வேக வைத்த இறாலை சேர்க்கலாம். இரண்டும் இல்லாமலும் செய்யலாம். விரும்பினால் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்