முட்டை வறுவல்

தேதி: June 22, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (4 votes)

 

முட்டை - 4
கடலை மாவு - 2 டீஸ்பூன்
அரிசிமாவு - 3 டீஸ்பூன்
கார்ன் மாவு - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
அரைத்த மல்லி, புதினா விழுது - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு


 

முட்டையை அவித்து நீளவாக்கில் இரண்டாக மஞ்சள் கரு உடையாமல் நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய முட்டைகளை மல்லி, புதினா விழுதில் தோய்த்து எடுத்துக் கொள்ளவும்.
மாவு வகைகள், உப்பு, மிளகாய்த்தூளை சிறிது நீர் தெளித்து பிசறி முட்டைகளை அந்த மாவில் பிரட்டி எடுக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு முட்டைகளை மெதுவாக போடவும். சுற்றிலும் மீண்டும் எண்ணெய் விடவும். சிவந்ததும் மறுபுறம் திருப்பிப்போட்டு வெந்ததும் எடுக்கவும்.
பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி சாதத்துடன் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்